அடேங்கப்பா இதுதான் காலிஃப்ளவர் – புதினா ரைஸா…?

0
177
www.radiomadurai.com

தேவை:
ஆய்ந்த காலிஃப்ளவர், சாதம் – தலா ஒரு கப் பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் – தேவையான அளவு இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் புதினா – ஒரு கைப்பிடி அளவு எண்ணெய், நெய் – தலா 2 டீஸ்பூன். உப்பு – தேவையான அளவு.


செய்முறை: காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும். புதினாவுடன் பச்சை மிளகாய் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்த புதினா விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பிறகு காலிஃப்ளவரைச் சேர்த்து வேகவிட்டு இறக்கவும். இதனுடன் சாதம் சேர்த்து நன்கு புரட்டி எடுத்தால், காலிஃப்ளவர் –

புதினா ரைஸ் ரெடி-