இன்றைய சிந்தனை

…………………………….

”நீங்கள் நீங்களாகவே இருங்கள்”..
…………………………..

உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதைப் பண்ணுங்க.. அவங்க பண்றாங்க, இவங்க பண்றாங்க என்று உங்கள் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டாம்..

கண்டதையெல்லாம் மனதில் போட்டுக் கவலைப்படாதீர்கள். பிறருடன் அவசியம் இல்லாமல் போட்டி இடுவதைத் தவிர்த்து உங்களுடனே போட்டி இடுங்கள்.நீங்கள் நீங்களாகவே இருங்கள்..

இரண்டு வெவ்வேறு குருக்களின் சீடர்கள் சந்தித்து பேசிக் கொண்டு இருந்தார்கள்..

ஒரு சீடன் தனது குருவின் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கினான்.

“என் குரு மாயா ஜாலங்களின் மன்னர். ஆற்று நீரின் மேல் நடப்பார், காற்றிலே பறப்பார், தீயிலே குளிப்பார், புயலை எதிர்ப்பார். இப்படிப் பல அதிசயங்களைச் செய்வார்.

உன் குரு என்ன செய்வார்?”, என்று மற்ற சீடனிடம் கேட்டான்.

அதற்கு அந்த சீடன்,,,

“எனது குரு ஆற்று நீரில் குளிப்பார், காற்றை சுவாசிப்பார், தீயை பயன்படுத்தி சமைப்பார், புயலைக் கண்டால் மடத்தில் ஒளிந்து கொள்வார்’’.

நீ சொல்வது போல் எதுவும் என் குரு செய்ததை நான் இதுவரை பார்த்தது இல்லை..

எதற்கும் அவருக்கு என்ன மாயாஜாலம் தெரியும் என அவரிடமே விசாரித்து விட்டு வருகிறேன் என்றான்.

அடுத்த நாள் இரண்டு சீடர்களும் சந்தித்துக் கொண்டார்கள்.. ”என்ன உன் குருவிடம் விசாரித்து வந்தாயா? என்று கேட்டான்.

ஆமாம், என் குருவிடம்,
உங்களுக்கு என்னென்ன மாயஜாலங்கள் தெரியும் என்று கேட்டேன்.

அதற்கு அதிசயங்கள் எதுவும் நிகழ்த்தாமல் சாதாரணமாக இருப்பது தான் எனது அதிசயம்” என்று என் குரு சொன்னார்

மற்றும், ”சாதாரண மனிதனாகவே இரு. அதுதான் உன்னை அசாதாரணமானவனாக மாற்றும்” என்றார் என்றான்..

ஆம்.,நண்பர்களே..,

மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாவிட்டாலும்.
நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

மற்ற மனிதர்களைத் திருப்திப்படுத்துவது இயலாத செயல்.. ..

எளிதில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் குறிக்கோளை அடைவதை விட்டு விட்டு எட்ட முடியாத இலக்குகளைக் குறித்து கனவு காணுவதை நிறுத்துங்கள்..

வாழ்வை முற்றிலுமாக வாழுங்கள்:..