ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக முழுவீச்சில் தயாராகும் அவனியாபுரம்!

0
91

மதுரை அவனியாபுரத்தில் தைப்பொங்கல் அன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முன்னேற்பாட்டுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள 430 மாடுபிடி வீரர்கள் உடற்தகுதி சான்று மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கொரான தொற்று இல்லை என சான்றுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

840 காளைகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களை சுற்றி 20 இடங்களில் குடிநீர் வசதியும் நடைபெறும் 15-க்கு மேற்பட்ட நடமாடும் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை ராகுல் காந்தி பார்வையிட உள்ளதால், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.