டூ இன் ஒன் வெந்தயப் பொடி

0
108

தேவையானவை

வெந்தயம் – அரை கப், காய்ந்த மிளகாய் – 8, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, புளி – நெல்லிக்காய் அளவு.

செய்முறை:

வெந்தயத்தை 8 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு துணியில் கட்டி வைக்கவும். அதில் தண்ணீர் தெளித்துக் கொண்டே இருந்தால், இரண்டு நாளில் நன்கு முளைத்து விடும். வாணலியைக் காயவைத்து, மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றைப் போட்டு வறுத்துவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். புளியையும் அந்த சூட்டிலேயே போட்டுப் புரட்டி எடுக்கவும். இவற்றோடு முளைகட்டிய வெந்தயத்தையும் போட்டெடுத்து, மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் லேசாக வெந்நீர் விட்டுக் கிளறினால் ‘இன்ஸ்டன்ட்’ துவையலாகிவிடும். சாதத்தில் போட்டும் சாப்பிடலாம். சிறிது எண்ணெயில் வெங்காயம், பூண்டு, தக்காளி தாளித்து, வெந்தயப் பொடியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றினால் ‘இன்ஸ்டன்ட்’ வெந்தயக் குழம்பு ரெடி.

பயன்:

வெந்தயம் இரத்தத்தை சுத்திகரிப்பதில் சிறப்பிடம் பெறுகிறது. அத்துடன் கூந்தலில் ஏற்படும் பொடுகு, நுனி பிளவுபடுதல் போன்ற பிரச்னைகளுக்கு வெந்தயம் சிறந்த மருந்து