தீபாவளி_ஸ்பெஷல்

0
115

ஸ்வீட் & கார வகைகள்

ஸ்வீட் கார மிக்சர்..

தேவையான பொருட்கள்:

கெட்டி அவல், கடலை பருப்பு – தலா, 200 கிராம்,
இரண்டையும் தண்ணீரில் ஊற விடவும்.

முந்திரி, காய்ந்த திராட்சை, வறுத்து தோல் நீக்கிய
வேர்க் கடலை, வெள்ளரி விதை – தலா, 100 கிராம்,

சர்க்கரை – 150 கிராம்,
மிளகாய் துாள் – 2 தேக்கரண்டி,
பெருங்காய துாள், திராட்சை,
தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை:

ஊற வைத்த அவல் மற்றும் கடலை பருப்பை வடிகட்டிய
பின், மிதமாக காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
முந்திரியை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்.

பொரித்த அவல், கடலை பருப்பு, முந்திரி, சர்க்கரை,
வேர்க் கடலை, வெள்ளரி விதை, மிளகாய் துாள்,
பெருங்காய துாள், காய்ந்த திராட்சை மற்றும் தேவையான
உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

கார தட்டை!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு – 2 கப்,
பொட்டு கடலை மாவு – அரை கப்,
ஊற வைத்த கடலை பருப்பு – ஒரு தேக்கரண்டி,
பெருங்காயம் – கால் தேக்கரண்டி,
வரமிளகாய் – 4,
மிளகு – 2 தேக்கரண்டி,
வெண்ணெய் – 2 தேக்கரண்டி,
எள் – 1 தேக்கரண்டி,
கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு.

செய்முறை:

கறிவேப்பிலை, வரமிளகாய், மிளகு, பெருங்காயம்
அனைத்தையும் ஒன்றிரண்டாக அரைக்கவும். பின்,
அரிசி மாவு, பொட்டு கடலை மாவு, உப்பு, வெண்ணெய்,
கடலை பருப்பு மற்றும் அரைத்த கலவையுடன்
சேர்த்து தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு
பிசையவும்.

ஒரு துணியில் மாவை தட்டையாக தட்டி, எண்ணெயில்
பொரித்தெடுக்கவும்.

பிரெட் காஜா!

தேவையான பொருட்கள்:

ரொட்டி துண்டு – 10,
சர்க்கரை – ஒரு கப்,
ஏலக்காய் துாள் – ஒரு சிட்டிகை,
பாதாம், பிஸ்தா, முந்திரி துருவல் – தலா ஒரு தேக்கரண்டி,
தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை:

ரொட்டியின் ஓரங்களை நீக்கி, விரும்பிய வடிவில்
துண்டுகளாக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு
ரொட்டி துண்டுகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரை மூழ்கும் அளவுக்கு
தண்ணீர் விட்டு, கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சி இறக்கவும்.
இதில், பொரித்த ரொட்டி துண்டுகளை, 10 நிமிடம் ஊற
வைத்து எடுக்கவும். மேலே, பாதாம், முந்திரி, பிஸ்தா துருவலை
துாவி அலங்கரித்து பரிமாறவும்.

மில்க் கேக்!

தேவையான பொருட்கள்:

பால் – 1 லிட்டர்,
சர்க்கரை – 100 கிராம்,
எலுமிச்சை சாறு, தண்ணீர், நெய் – தலா ஒரு தேக்கரண்டி.

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பை மிதமான
தீயில் வைத்து சுண்ட காய்ச்சவும். கால் பாகமாக பால்
சுண்டியதும், எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின், சர்க்கரை
சேர்த்து நன்றாக கிளறவும். கலவையானது பாத்திரத்தில்
ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.

அகலமான ஒரு தட்டில் நெய் தடவி, கலவையை கொட்டி
மூடி வைக்கவும். ஆறிய பின் துண்டுகளாக்கி பரிமாறவும்.

பாதாம் அல்வா!

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு, நெய் – தலா, 100 கிராம்,
சர்க்கரை – 200 கிராம்,
காய்ச்சி ஆற வைத்த பால் – 200 மி.லி.,

செய்முறை:

பாதாம் பருப்பை ஊற வைத்து, தோல் நீக்கவும்.
இதனுடன் பால் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
வாணலியில் சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர்
சேர்த்து சூடாக்கி, இளம் பாகு பதம் வரை காய்ச்சவும்.
இதனுடன் அரைத்த பாதாம் விழுது சேர்த்து, அடுப்பை
மிதமான தீயில் வைத்து, இடையிடையே நெய் சேர்த்து
கிளறவும்.

பாத்திரத்தில் கலவை ஒட்டாமல் சுருண்டு வரும்போது,
இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் முந்திரி,
பாதாம் துருவலை மேலே துாவவும்.

ஜிலேபி!

தீபாவளி ஸ்பெஷல்
தேவையான பொருட்கள்:

மைதா மாவு – கால் கிலோ,
சர்க்கரை – முக்கால் கப்,
கெட்டி தயிர் – 2 தேக்கரண்டி,
ரோஸ் எசன்ஸ் – 1 ஒரு தேக்கரண்டி,
சிவப்பு புட் கலர் – கால் தேக்கரண்டி,
உப்பு – ஒரு சிட்டிகை,
பொரிக்க தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை:

தயிருடன் உப்பு சேர்த்து கலக்கவும். இதனுடன் மைதா மாவு,
சிவப்பு கலர் புட் சேர்த்து, வடை மாவு பதத்துக்கு பிசையவும்.
சர்க்கரை மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி, கம்பி பதத்துக்கு
பாகு காய்ச்சி இறக்கியவுடன், ‘எசன்ஸ்’ சேர்த்து கலக்கவும்.

கெட்டியான துணி அல்லது பாலிதீன் கவரின் நுனியில் சிறு
துளை போடவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து,
மாவை துணி அல்லது பாலிதீன் கவரில் போட்டு ஜிலேபி
போல பிழிந்து, இருபக்கமும் வேக விடவும். பின், இதை பாகில்
போட்டு ஊற வைத்து எடுக்கவும்.

நெய் பால் கேக்

தேவையான பொருட்கள்

நெய் – 3 தேக்கரண்டி
எழுமிச்சைசாறு – 2 தேக்கரண்டி
சர்க்கரை – ¾ கப்
பால் – 1½ லிட்டர்
அலங்கரிக்க – பாதாம், பிஸ்தா

செய்முறை:

பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு நான்ஸ்டிக் ஸ்டிக் கடாயில் ஒன்றரை லிட்டர் பாலை
ஊற்றி அதை மிதமான சூட்டில் கிட்டத்தட்ட இரண்டு
மணிநேரம் அடிப்பிடிக்காமல் கிளறி விட்டுக் கொண்டே
இருக்க வேண்டும்.

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு திரட்டுப்பால் போல்
பாலானது திரண்டு வரும். அதில் இரண்டு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு கலந்து மற

ுபடியும் கிளற வேண்டும்.
இப்பொழுது முக்கால் கப் சர்க்கரையை சிறிது சிறிதாக
கலந்து கிளற வேண்டும்.

பால் திரட்டானது சர்க்கரை சேர்த்தவுடன் இளகி
மறுபடியும் கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.
இப்பொழுது நெய்யையும் ஊற்றி கிளற, கிளற நன்கு
திரண்டு வரும். பின்பு ஒரு ட்ரேயில் நெய் தடவி இந்தப்
பால் திரட்டை அதில் கொட்டி சமப்படுத்தி வைக்க
வேண்டும்.

இந்த கலவையை அறை வெப்பத்திலேயே நன்கு
ஆறவிட்டு விட வேண்டும். நன்கு ஆறிய பின்பு இவற்றை
வேண்டிய வடிவத்தில் துண்டுகள் போட்டு அதன் மேல்
பாதாம், பிஸ்தா வைத்து அலங்கரிக்கலாம்..