வேலாயுதம்

0
163

வேலன் ஏந்தும் விதவிதமான வேல்கள்

முருகப் பெருமானின் கரத்தில் விளங்கும் #வேலாயுதம் வடிவாலும்,வனப்பாலும் அது செய்யப்பட்ட பொருளாலும் புராணச் சிறப்பாலும் அது நிகழ்த்திய வீரச் செயலாலும் பல்வேறு பெயர்களைப் பெறுகின்றது.
இவ்வகையில் அதன் அமைப்பை ஒட்டி
●சக்திவேல்,
●வஜ்ரவேல்,
●இலைவேல்,
●நெடுவேல் என்ற பெயர்களைப் பெற்றுள்ளது.

சக்திவேல் சக்தியின் வடிவாகவும்,
வஜ்ரவேல் வைரம் பதித்ததாகவும் இருக்கின்றன.
சில வேல்களின் இலைப் பகுதியில் மந்திரங்கள் எழுதப்பட்டுள்ளன.இப்படி அமைக்கப்படும் மந்திரச் சக்கரங்கள்,மந்திர வடிவங்களையொட்டி அது மந்திரவேல் எனப்படுகிறது.
உயர்ந்த ரத்தினங்கள் இழைக்கப்பட்டு செய்யப்பட்ட வேல் நவரத்தினவேல் என்றும்,மாணிக்கம் பதித்த வேல் மாணிக்கவேல் என்றும்,வைரக் கற்களைக் கொண்டு இழைத்த வேல் வைரவேல் என்றும்,தங்கத்தால் செய்யப்பட்ட வேல் தங்கவேல் என்றும்,முத்துக்கள் பதிக்கப்பட்ட வேல் முத்துவேல் என்றும் அழைக்கப்படுகின்றன.
மேலும், அன்பர்கள் அருள் புரியம் உயர்ந்த குணங்களைக் கொண்டிருப்பதால் குணரத்தின வேல் என்றும்,மணிரத்தின வேல் என்றும்,தங்கமாக எண்ணத்தில் திளைப்பதால் தங்கவேல் என்றும்,எதிரிகளைச் சங்கரித்து அழிப்பதால் சத்ரு சங்கார வேல் என்றும் அழைக்கப்படுகிறது.
அவரவர் தகுதிக்கும்,வளமைக்கும்,செல்வச் செழுமைக்கும் ஏற்ப,வேல்களைப் பொன்னாலும்,நவமணிகள் இழைத்தும் செய்து வழிபடுகின்றனர்,என்றாலும் வீரர்கள் ஏந்தும் வேல்கள் யாவும் உறுதியான எஃகினால் செய்யப்படுவதாகும்.அது கூர்மை மிக்கதாகவும் உறுதி மிக்கதாகவும் வீசி எறிவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்கிறது.

⚜சக்தி வேல்⚜

வேலின் பல்வேறு வடிவங்களில் ஒன்று சக்தி வேலாயுதம் ஆகும்.

சக்தி என்னும் ஆயுதத்தின் வடிவம் என்பது மூன்று முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்தது போன்றதாகும்.
✨முருகன் நாற்கரங்களோடு திகழ்கையில்,சக்தியாயுதத்தைத் தனது இடது மேற்கரத்தில் ஏந்துகிறார்.

சக்திவேல் என்பது சக்தி ஆயுதத்தை நீண்ட தண்டின் முனையில் பொருத்தி அமைக்கப்பட்டதாகும்.வேலாயுதத்தைப் போலவே சக்தி வேலாயுதமும் தனிச் சிறப்புடன் போற்றப்படு கிறது.

அன்பர்கள் பலர் சக்திவேல் என்ற பெயரைச் சூட்டிக் கொள்கின்றனர்.சக்தி ஆயுதம் அக்னிக்குரிய அடையாளமாகும்.அதையொட்டிேய அக்னியில் உதித்தவரான முருகன் சக்திவேலை ஏந்துகின்றார்.

தணிகை முருகன் சக்தி ஆயுதத்தை ஏந்தியிருப்பதால்,ஞானசக்திரர், சக்திரர் என்றே அழைக்கப்படுகின்றார்.

சிக்கல் சிங்காரேவலர்,
சுவாமிமலை சுவாமிநாதன்,
வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமார சுவாமி போன்ற முருகன் வடிவங்களுக்கு,உயர்ந்த கல்லிழைத்த சக்தி வேலாயுதம் சாத்தப்படுகிறது.
முருகன் மேற்கரங்களில் வஜ்ரம்,சக்தி ஆகிய இரண்டையும் தாங்கியுள்ளார் என்றாலும் அவற்றுடன் சக்திவேலையும் தாங்குகின்றார்.

வேலாயுதத்தை முருகப் பெருமானாகவே கொண்டாடுவதால் அதைப் படைக்கலமாக அமைக்காமல் அதனையொத்த சக்தி ஆயுதத்தைப் படைக்கல வழிபாட்டிற்கு வைத்துள்ளனர் என்பது பலரது கருத்தாகும்.
தொடரும்…