சொன்னா அசந்துடுவீங்க! பேட்ட’ படத்தில் கார்த்திக் சுப்புராஜுக்கு பிடித்த காட்சி எது தெரியுமா…

0
154

பேட்ட படத்தில் தனக்கு பிடித்த காட்சி எது என்பதை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். ரஜினியை முதல்முறையாக இயக்கி இருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு அதிதீவிர ரஜினி வெறியர். இதனால் இப்படத்தில் ரஜினிக்கு நிறைய மாஸ் காட்சிகளை வைத்திருக்கிறார். அதே போல பஞ்ச் வசனங்களும் அனல் பறக்கும் வகையில் இருக்கும் என இப்போதே பேச்சு அடிபடுகிறது.

இப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. இந்த வார இறுதிக்குள் சரியான ரிலீஸ் தேதி முடிவாகிவிடும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேட்ட படத்தில் ரஜினியும் சிம்ரனும் சிரித்து பேசியபடியே நடந்து வரும் ஒரு போட்டோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டது. இதனை ரஜினி ரசிகர்கள் வைரலாக்கினர்.

இந்த போட்டோ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பேட்ட படத்தில் தனக்கு மிகவும் பிடித்த காட்சி இது தான் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.Thanks  https://tamil.filmibeat.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here