நீர் குறித்த தகவல்கள்.

  நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவம்.நீர் தான் இன்ப துன்பம அனைத்திற்கும் அடிப்படை;உயிரையும் உடைமையையும் காப்பாற்றுவது நீர் தான்.நானிலத்தை வளமுள்ளதாக்குவதற்கும் அனைத்து மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கும் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது.நீரின் இயல்புக்கேற்ப நிலத்தின் இயல்பும் மாறும் தன்மை வாய்ந்தது;

            “செம்புலப் பெயல் நீர் போல்

            அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”

நீரின் சுவையும் நிலத்தின் இயல்புக்கேற்றவாறு அமைந்து உடல் வளர்ச்சிக்கும் வாழ்வியல் மாற்றங்களுக்கும் பெருந்துணை புரிகிறது.

மலை நீர்:

      மலைகள் பலவற்றிலும் நீர் உற்பத்தி ஆகும்பொழுது மூலிகைத் தாவரங்கள் பலவற்றுள் கலந்து வருவதால் மலை நீர் சுவைமிக்கதாகவும் உடல்நலத்திற்குத் துணை நிற்பதாகவும் உள்ளது .சித்தர்களும் ஞானிகளும் மலை நீரை உண்டு பல ஆண்டுகள் நீடித்து வாழ்வு பெற்று வாழ்ந்ததை அறிந்து கொள்ள முடிகிறது.

பாறை நீர் :

       மலைப்பாறையில் ஊறிவரும் நீரை உட்க்கொண்டால் உடல் முழுவதும் அதிக குளிர்ச்சியோடு விளங்கும். கரும் பாறை சுக்கான் பா றையில் ஊறிவரும் நீரை உட்கொண்டால் நோயில்லா வாழ்வு வாழலாம் கடும்பாறை நீரினைக் குடித்து வாழ்ந்தால் நீர்ச்சோகை, வாந்தி, பித்தக் காய்ச்சல், மயக்கம், நீர்க்கடுப்பு, நீர்வேட்கை போன்ற அனைத்துக் குறைபாடுகளும் நீங்கும். பெண்களின் மாதவிலக்கு நாட்களில் கரும்பாறையில் ஊறும்  நீர் உடல் ஆரோக்கியத்திருக்கும் வலிமைக்கும் ஏற்றது சுக்கான் பாறையில் உற்பத்தியாகும் நீர் பித்தம், கபம், வாத நோய்களுக்கு நல்லது.

அருவி நீர்: 

          உயரமான மலைகளில் இருந்து விழும் அருவி நீரில் குளிப்பதும் குடிப்பதும் உடல்சுகத்திற்கு நல்லின்பம் நல்கும். ஆண்டிற்கு ஒருமுறையாவது , இருமுறையாவது அருவியில் நீராடி மகிழ்வது உடலுக்கும் உள்ளத்திற்கும் நிறைவைத்தரும். அருவி நீரில் மூலிகைகள் கலப்பதால் இரத்தப் பித்த நோய்கள் விலகும்

அடவி காடு)நீர்:

       மலையிலிருந்து ஓடிவரும் நீர் மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளைக் கடந்து வரும்போது அதில் மருத்துவ ஆற்றல் இருப்பினும்,அதனால் தலைப்பாரம்,நச்சுக் காய்ச்சல் ஏற்படவும் காரணமாகிறது.

சுனை நீர்:

   மலையில் தோன்றும் நீரூற்றின் நீர் சுவையானதாக இருக்கும்.எனினும்,அதன் தூய்மை கருதி அதை அருந்துவதை சிலர் தவிர்ப்பார்.

ஆற்று நீர்: ஓடி வரும் ஆற்று நீரில் நீராடுவதால் உடல்  அழகையும், வலிமையையும் ஊக்கத்தையும் பெறலாம்.வாத,பித்த நோய்களைக் கட்டுப்படுத்தும்.ஆண்மையை அதிகரிக்கும்  ஆற்றுநீரில் நாள்தோறும் குளிப்பது சிறப்பாகும்.

குளத்து நீர்:

  தேங்கி நிற்கும் குளத்து நீர் குளிர்ச்சியானதாக இருக்கும்.பசுமை,செம்மை நிறைந்த நீரினால்  வாத, பித்த, கப நோய்கள் உண்டாகும்.

ஏரி நீர்:

    தேங்கி நிற்கும் நீர் நிலைகளை எரி என்று அழைக்கிறோம்; எரி நீர் துவர்ப்புச் சுவை உடையதாக இருக்கும். ஏரி  நீர் உடலுக்கு ஏற்றது என்று சொல்ல முடியாது.

ஊற்று நீர்:

    நிலத்தடியிலிருந்து ஊறி வரும் நீர் ஊற்று நீர் உடலுக்கு பலத்தை நல்கும். இனிப்புத் தன்மை கொண்ட ஊற்று நீரால் பித்தம் தரும். தாகம் தணியும்.

கிணற்று நீர்:

      நிலத்தடியிலிருக்கும் நீர் ஆழமானப் பகுதியிலிருந்து மேலே கொண்டு வரப்பட்டு பயன் படுத்தப்பட்டுவருவதால் கிணற்று நீர் தூய்மையானதாகவும் நன்மை செய்வதாகவும் அமையும் அதிக வெப்பம்,  பசி, உடல் எரிச்சல், உடல் கடுப்பு, மயக்கம் போன்ற நோய்களை குணப்படுத்த வல்லது.

 பல்வகை நீரினால் வாழ்க்கையை வளப் படுத்தும் சூழலில் இயற்கையின் பங்களிப்பு உள்ளது. இயற்கையான நீரை வளமான வாழ்விற்கு பயன்படுத்துவோம். நீர் சிக்கனத்தினால் நிலவுலகை செம்மை படுத்துவோம். ‘நீர் இல்லா உலகமில்லை ‘நீர்’ தான் வாழ்வின் எல்லை’ என்பதை அனைவருக்கும் உணர்த்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *