கற்கண்டு வடை

0
176

தேவையான பொருட்கள்:

வெள்ளை உளுந்து – 1 கப்
கற்கண்டு பொடி – 1 கப்
பச்சரிசி – 50 கிராம்
முந்திரி – 8
ரஸ்தாளி வாழைப்பழம் – 1
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசியையும், உளுந்தையும் சுத்தம் செய்து, 
தண்ணீரில் ஊற வைக்கவும். 
நன்றாக ஊறியதும் வடிகட்டி, கெட்டியான பதத்தில் 
அரைக்கவும். 

பதம் அரைபட்டதும், கற்கண்டு பொடி, முந்திரி, 
வாழைப்பழம் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.

இந்த மாவை, சிறிய வடை போல் தட்டி, எண்ணெயில் 
பொரித்தெடுக்கவும். சுவையான கற்கண்டு வடை
தயார். குழந்தைகள், மிகவும் விரும்பி சாப்பிடுவர். 
சத்துக்கள் நிறைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here