தனி மாவட்டமாகிறது கள்ளக்குறிச்சி – சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு.!

0
160

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் தமிழகத்தின் 33வது மாநிலமாக உருவாகிறது கள்ளக்குறிச்சி.

இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆளுநர் உரையுடன் கூடிய இக்கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை விவகாரம், மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டு வருவதுடன், அரசு சார்பில் பல்வேறு அறிவிப்புகளும் வெளியிட்டுவருகிறது.

அந்த வகையில், நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் உள்ளிட்டவை புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் 33வது மாவட்டமாக உதயமாகிறது கள்ளக்குறிச்சி.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதேபோல், திண்டிவனத்தை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தையும் மூன்றாக பிரிக்க வேண்டுமெனவும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here