வெள்ளரிக்காய் சாட்

0
155

தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் – 1

கேரட் – 1
கெட்டி தயிர் – அரை கப்
சாட் மசாலா – ஒன்றரை டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்
ஓமப்பொடி (அ) மிக்ஸர் – அலங்கரிக்க
புதினா இலைகள் – 1 கைப்பிடி
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

வெள்ளரிக்காயை தோல் நீக்கி வட்டமாக நறுக்கி கொள்ளவும். 

தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிடவும். இரண்டு மணிநேரத்தில் தயிரில் உள்ள நீர் வடிந்து கெட்டியாகிவிடும். 

வடிகட்டிய கெட்டி தயிரில் உப்பு, சாட் மசாலா, சீரகத்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். 

வெள்ளரித் துண்டின் மேல் ஒரு டீஸ்பூன் தயிர் கலவையைத் தடவி, அதன் மேல் துருவிய கேரட் மற்றும் ஓமப்பொடியைத் தூவ வேண்டும். 

அதன்மேல் புதினா இலையை வைத்துப் பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை radiomadurai@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here