எழுத்தாளராக ஆசையா?

0
181

எழுத வேண்டும் அல்லது எழுத்தாளராக வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், ‘200 வேர்ட்ஸ் ஏ டே’ என்ற தளத்தைக் குறித்துக்கொள்ளலாம். எழுத்தார்வமிக்கவர்களை ஊக்குவிக்கும் தளம் இது. இதைத் தனியே செய்யாமல் எழுத்தார்வமிக்கவர்களுடன் இணைந்து மேற்கொள்ள உதவுகிறது இந்த சேவை.

எதைப் பற்றியும் யோசிக்காமல் முதலில் எழுதும் பழக்கத்தை வர வைத்துக்கொண்டால், அதன் பிறகு விரும்பிய வகையில் எழுதலாம் என்பதுதான் இந்தத் தளத்தின் அடிப்படை. இந்தக் கருத்துக்கு இந்த இணையதளம் செயல்வடிவம் கொடுத்திருக்கிறது. இதில் உறுப்பினராகத் தினமும் குறைந்தது 200 சொற்களையாவது எழுத வேண்டும். இந்தத் தளத்திலேயே எழுதி இங்கேயே பதிப்பிக்கலாம்.

இதேபோல மற்றவர்கள் எழுதி பதிப்பிப்பதையும் வாசித்து ஊக்கம் பெறலாம். பலரும் எழுத்தார்வமிக்கவர்கள் என்பதால், இந்தத் தளம் எழுதுவதற்கு தூண்டுதலாக அமையும். ஒவ்வொரு நாளும் புதிதாக உறுப்பினர்கள் இணைந்துகொண்டே இருக்கின்றனர். அனைவருமே ஆங்கிலத்தில்தான் எழுதுகின்றனர். நம் பங்குக்குத் தமிழிலும் எழுதிப் பார்க்கலாம்.

இணைய முகவரி: https://200wordsaday.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here