கருணை க்கிழங்கு காரக்குழம்பு

0
20

*🍱தேவையான பொருட்கள்*

கருணை கிழங்கு கால் கிலோ
பெரிய வெங்காயம் 1 தக்காளி 1
புளி பெரிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய் 4 ஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் 3 ஸ்பூன்
தேவைப்பட்டால் தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
தேங்காய் ஒரு கப் நைசாக அரைத்தது

*🍴செய்முறை*

முதலில் கருணை கிழங்கை நன்றாக மண் போக கழுவி இரண்டாக வெட்டி குக்கரில் புளி மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்
குக்கரில் எண்ணை ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
வெங்காயம் லேசாக வதங்கியதும் ஒரு தக்காளியை சேர்க்கவும்
இப்பொழுது பெரிய நெல்லிக்காய் அளவு புளியை நன்றாக கரைத்து வடிகட்டி வெங்காயம் தக்காளியில் சேர்க்கவும்
நைசாக அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து மிளகாய் தூள் மற்றும் குழம்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும்
வேக வைத்த கருணைக்கிழங்கை தோல் நீக்கி குழம்பில் சேர்க்கவும்
குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
ஏற்கனவே கருணை கிழங்கை வேகவைத்து இருப்பதால் ஒரு விசில் விட்டால் போதும்
கருணைக்கிழங்கு கார குழம்ப ரெடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here