மராத்தி மீன்

💢மராத்தி மீன் கறி💢

🥗அம்மா சமையல் 🥗

🍱தேவையான பொருட்கள்

1.மீன் – 1/2 கிலோ
2.வெங்காயம் – 1
3.இஞ்சி,பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்
4.வற்றல்தூள் – 1/2 டீஸ்பூன்
5.மல்லிதூள் – 1/2 டீஸ்பூன்
6.உப்பு – தேவையான அளவு
7.கடுகுஎண்ணெய் – தேவையான அளவு
8.குடம்புளி – 2 துண்டு
9.தேங்காய் துருவல் – 1/2 கப்

🍴செய்முறை

1.மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.

2.மீன், வற்றல்தூள், மல்லிதூள், உப்பு,வெங்காயம், குடம்புளி, சேர்த்து பிரட்டி 1/2 மணிநேரம் அப்படியே வைக்கவும்.

3.தேங்காயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

4.பின் வாணலியில் தேங்காய் விழுது, மீன் கலவை, தேவையான அளவு எண்ணெய், உப்பு ,தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

5.குழம்பு நன்கு கொதித்து மீன் வெந்து எண்ணெய் பிரியவும் இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *