மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் வெஜ் பால்ஸ்

மதியம் செய்த சாதம் மீந்து விட்டால் அதை வைத்து மாலையில் சூப்பரான ரைஸ் வெஜ் பால்ஸ் செய்து சாப்பிடலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

🍱தேவையான பொருட்கள் :

வடித்த சாதம் – 2 கப்
கோஸ், கேரட், பீன்ஸ் – ஒரு கப்,
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்),
கார்ன் ஃப்ளார், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது – 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

🍴செய்முறை :

* வடித்த சாதத்தை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.

* வெங்காயம், கொத்தமல்லி, கோஸ், பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்துப் நன்றாக பிசிறி, சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிடித்து வைத்த உருண்டைகளை போட்டு பொரித்தெடுக்கவும்.

* சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் வெஜ் பால்ஸ் ரெடி.

* தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

* மதியம் செய்த சாதம் மீந்து விட்டால் மாலையில் இவ்வாறு ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம்.

* விருப்பப்பட்டால் சீஸ் சேர்த்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *