ஸ்ரீராமகிருஷ்ணரின் கதைகள், உவமைகள்

0
18

மூன்று நண்பர்களும் பக்தியும்.

ஒரு பக்தர்- ஞானம் கலந்த பக்தி, பிரேம பக்தி- இவற்றில் எது நல்லது.

ஸ்ரீராமகிருஷ்ணர்- பகவானிடம் ஆழ்ந்த அன்பு உண்டாகாமல் பிரேம பக்தி ஏற்படாது. மேலும், பகவான் என்னுடையவர்” என்ற அறிவும் வேண்டும்.

” மூன்று நண்பர்கள் காட்டு வழியாகச்சென்று கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு புலி வந்து விட்டது.
அவர்களில் ஒருவன் , ‘‘ சகோதரர்களே , நாம் செத்தோம்.!” என்று சொன்னான். இரண்டாமவன், ‘‘நான் ஏன் சாக வேண்டும்? வாருங்கள். பகவானிடம் பிரார்த்தனை செய்வோம்” என்று சொன்னான். மூன்றாமவனோ, வேண்டாம், பகவானை நாம் ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்? வாருங்கள் இந்த மரத்தில் ஏறிக் கொள்ளலாம்” என்றான்.

‘நாம் செத்தொழிந்தோம் ” என்று சொன்னவன் ” பகவான் உண்மையை அறியவில்லை. ‘‘ வாருங்கள். பகவானிடம் பிரார்த்தனை செய்வோம்” என்று சொன்னவன் ஞானி. பகவான் தான் படைத்தல், காத்தல், அழித்தல் எல்லாம் என்ற உணர்வு அவனுக்கு இருந்தது. ‘‘ பகவானை நாம் ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்? வாருங்கள். இந்த மரத்தில் ஏறிக்கொள்ளலாம்” என்று சொன்னவன் இருக்கிறானே, அவனுடைய உள்ளத்தில் தான் பிரேமை உதித்திருந்தது. அன்பு தோன்றியிருந்தது. தன்னைப் பெரியவனாகவும் தன் அன்புக்கு உரியவனைச் சிறியவனாகவும் கருதுவது பிரேம பக்தியின் இயல்பு.
தான் நேசிப்பவனுக்குக் கஷ்டம் கூடாது என்று எச்சரிக்கையுடன் பார்த்துக்கொள்ளும் இயல்பு அது. தான் அன்பு செலுத்துபவனுக்குக் காலில் ஒரு முள் கூட தைத்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவனது விருப்பம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here