கடமையை செய்தல்

*கடமைகளை செய்தல்:*

*1. தமோ குணம்:*
சோம்பேறித்தனத்தின் காரணமாக, கடமைகளை தள்ளி போடுதல் அல்லது கைவிடுதல்.

இந்த வாழ்க்கையில் அடையும் பலன்: கடமையை கைவிடுவதால் பாவ விளைவுகள், மன அழுத்தம்.

அடுத்த வாழ்க்கையில் அடையும் பலன்: நரகத்திற்கு செல்லுதல்.

*2. ரஜோ குணம்:* சந்தோசம், வெற்றி, லாபம், மரியாதை ஆகிய பலன்களை தரக்கூடிய செயல்களை மட்டுமே செய்தல்.

இந்த வாழ்க்கையில் அடையும் பலன்: பலன்களை தராத முக்கியமான கடமைகளை கைவிடுதல், பலன்களை எதிர்பார்த்தே செயல்களை செய்வதால் பதட்டம், பலன்கள் கிடைத்தால் தற்பெருமை அடைதல் மற்றும் பேராசைப்படுதல், பலன்கள் கிடைக்கவில்லையென்றால் கோபப்படுதல், வேறு யாருக்கேனும் பலன் கிடைத்தால், பொறாமைபட்டு, குறை கண்டுபிடித்து, புறம் பேசுதல், கிடைத்த பலன்களை தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று பயப்படுதல்.

அடுத்த வாழ்க்கையில் அடையும் பலன்: மீண்டும் பூமியில் பிறத்தல்.

*3. சத்வ குணம்:* சந்தோசம், வெற்றி, லாபம், மரியாதை ஆகிய பலன்கள் கிடைக்கிறதோ இல்லையோ, அவற்றை பற்றி எதிர்பாராமல், கடமைகளை நேரத்திற்கு தவறாமல் செய்தல்.

இந்த வாழ்க்கையில் அடையும் பலன்: சந்தோசம்.

அடுத்த வாழ்க்கையில் அடையும் பலன்: சொர்க்கத்திற்கு செல்லுதல்.

*4. சுத்த சத்வ குணம்:* சத்வகுணத்தில் சொல்லப்பட்டது முழுமுதற் கடவுள் கிருஷ்ணரின் அறிவுரை என்பதால், அதனை பின்பற்றி கடமைகளை செய்தல். கிருஷ்ணரின் அறிவுரைப்படி, அவரை வழிபடுதல், கீர்த்தனை மூலம் அவர் புகழ் பாடுதல், புனித நாமத்தின் மூலம் அவரின் மீது மனதை நிலைநிறுத்துதல், பகவத்கீதை/ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றின் மூலம் அவரது அறிவுரைகளை படித்தல், அவருக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை எடுத்துக்கொள்ளுதல், அவரை பற்றிய அறிவை பிறருக்கு சொல்லித் தருவதற்கான சேவைகளை செய்தல்.

இந்த வாழ்க்கையில் அடையும் பலன்: சத்வ குணத்தில் கிடைக்கும் பலன்கள் + மனமும் உடலும் தூய்மையாதல் + முழுமுதற் கடவுளுடனான தூய அன்பினை உயிர்பித்தல்.

அடுத்த வாழ்க்கையில் அடையும் பலன்: முழுமுதற் கடவுளின் இருப்பிடமான கோலோகத்தை அடைதல்.

தங்களின் சேவையில்,
ஷ்யாம் முராரி தாஸ்,
பக்த ப்ரஹலாத் பள்ளி,
இஸ்கான் சென்னை,
8072599295

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *