சர்க்கரையை தவிர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்!

இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு உணவுகளை மிக அதிக அளவில் உட்கொள்ளும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குளிர்பானங்கள், இனிப்பு பண்டங்கள், டீ, காபி போன்ற அனைத்திற்குமே அதிகளவு சர்க்கரை சேர்ப்பதுண்டு.

இருப்பினும் அதிகளவு சர்க்கரை உடலுக்கு பல வகையில் கேடு விளைவிக்கின்றது.

குறிப்பாக அதிக சர்க்கரை உயர் ரத்த அழுத்தம் இருதயத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

மேலும் ரத்த குழாய்களை பாதிக்கின்றது. மாரடைப்பு, வாதம், சிறுநீர் பாதிப்பு இவற்றினை ஏற்படுத்துகின்றது.

அந்தவகையில் தற்போது சர்க்கரையினை தவிர்ப்பதன் மூலம் நாம் பெறும் நன்மைகளை என்னென்ன என்பதை பார்ப்போம்.

சர்க்கரை அளவினை நன்கு குறைக்கும் பொழுது கெட்ட கொழுப்பு வெகுவாய் குறைகின்றது.
மாரடைப்பு பாதிப்பு வெகுவாய் குறைகின்றது.
சர்க்கரை நோய் பிரிவு 2 பாதிக்கும் அபாயம் மிகவும் குறைகின்றது.
கொழுப்பு சேர்ந்த கல்லீரல் பாதிப்பு தவிர்க்கப்படுகின்றது.
புற்று நோய் பாதிப்பு அபாயம் குறைகின்றது.
சுவாசம் சீராய் இயங்குகின்றது.
உடலின் சக்தி கூடுகின்றது.
மூளை சுறுசுறுப்பாய் இயங்குகின்றது.
மறதி நோய் பாதிக்கும் கவலை இல்லை.
மன உளைச்சல் இருக்காது.
பசி குறைவாய் இருக்கும்.
சருமம் இளமையாய் இருக்கும்.
பல் மற்று வேறு மருத்துவ செலவு குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *