சிந்தனை துளி

நாம் பேசும் பேச்சு என்பது மற்றவர்களை பண்படுத்தாவிட்டாலும் கூட புண்படுத்தாத வகையில் அமைந்து இருக்க வேண்டும்.

பேசும்போது கனிவான, இதமான, இனிய சொற்களை கொண்டு பேச வேண்டுُّம்.
இவைகள் இல்லாமல் நம்மிடம் போனதால்தான் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகிறோம்..
கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும், தர்மம் செய்த பின் செய்யும் தர்மத்தைவிட மேலானது..
கொடுத்த தர்மத்தை சொல்லிக் காட்டாமல் இருப்பதே தர்மமாகும்

தர்மமே செய்யாமல் கனிவான, இனிய சொற்கள் மிகப் பெரிய தர்மம்

பெற்றோரிடம் பணிவாக பேச வேண்டும்!

மனைவியிடம் அன்பாக பேசவேண்டும்!

பெரியவர்களிடம் மரியாதையாக பேச வேண்டும்!

சிறியவர்களிடம் இரக்கமாக பேச வேண்டும்!

நண்பனிடம் நட்பாக பேச வேண்டும்!

மருத்துவரிடம் உண்மை பேச வேண்டும்!

எதிராளியிடம் சமாதானமாக பேச வேண்டும்!

அனாதைகளிடம் ஆதரவாக பேச வேண்டும்!

உறவினரிடம் உறவைப் பேச வேண்டும்!

நோயாளியிடம் சுகமாக பேச வேண்டும்!

கோழையிடம் வீரத்தை பேச வேண்டும்!

வீரனிடம் விவேகத்தை பேச வேண்டும்

ஆசிரியரிடம் பொறுப்பு உணர்வுடன் பேச வேண்டும்!

மாணவனிடம் ஒழுக்கம் பற்றி பேச வேண்டும்!

வியாபாரியிடம் வணிகம் பற்றி பேச வேண்டும்!

விவசாயியிடம் வேளாண்மை பற்றி பேச வேண்டும்!

முதலாளியிடம் லாபம் பற்றி பேசவேண்டும்!

தொழிலாளியிடம் வேலையைப் பற்றி பேச வேண்டும்!

இப்படித்தான் சகலவிதமான மனிதர்களிடம் அவர்களின் தகுதிக்கேற்ப பேச வேண்டும்

பெற்றோரில் ஒருவரோ, அல்லது அவர்கள் இருவருமோ முதுமை அடைந்துவிட்டால், அவர்களை ‘ச்சீ’ என்று (சலிப்பாக) சொல்ல வேண்டாம். அவ் இருவரையும் (உம்மிடமிருந்து) விரட்ட வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கனிவான, கண்ணியமான பேச்சையே பேச வேண்டும்.. ஆம்.நண்பர்களே

இனிய சொற்கள் பேசும் போது நம்பிக்கை பெருக் கெடுக்கும்.. உறவுகள் மேலும் வலுப் பெறும்..(ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி)..💐💐💐💐💐💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *