5 நாளில் 40 லட்சம்

0
65

புதிய பயனாளர்களை பெற்ற சிக்னல், டெலகிராம் செயலிகள்!

இந்தியாவில் 5 நாட்களில் சிக்னல், டெலகிராம் உள்ளிட்ட மெசஞ்சர் செயலிகளை புதிதாக பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை எட்டியுள்ளது.

வாட்ஸ்ஆப்பின் புதிய நிபந்தனைகளை ஏற்பதன் மூலம் தங்களின் அந்தரங்க தகவல்களை அந்நிறுவனம் அறியக்கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில்  கடந்த 6ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் வாட்ஸ்அப்பை பதிவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை 35 விழுக்காடு குறைந்தது.

அதே சமயம் ஜனவரி 6 முதல் 10 தேதி வரையிலான 5 நாட்களில், வாட்ஸ்அப்பின் மாற்று செயலிகளாக கருதப்படும் சிக்னலை பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 23 லட்சமாகவும், டெலகிராமை  பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.