தேவையானவை
முந்திரிப்பருப்பு – 1 கப்
கெட்டியான தேங்காய்ப்பால் – 1ஃ2 கப்
இரண்டாவது பால் – 1 கப்
நறுக்கிய வெங்காயம் – 1
மிளகாய் – 2
உப்பு – தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாய், தனியா, சீரகம் – வறுத்து அரைக்கவும்
செய்யும் முறை
முந்திரிப்பருப்பை வேக வைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம் போட்டு பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
வதங்கியவுடன் இரண்டாவது தேங்காய்ப்பால் விட்டு உப்புப் போட்டு கொஞ்சம் கொதிக்க விடவும்.
வெங்காயம் வெந்தவுடன், அரைத்த மசாலாப் பொருட்களைக் கொட்டி கெட்டியான தேங்காய்ப்பாலை ஊற்றி, வேக வைத்த முந்திரிப் பருப்பையும் சேர்த்துக் கிளறவும்.
குழம்பு ஒன்று சேர்ந்து வரும் சமயம் இறக்கவும்.