பன்னீர் & பச்சைப்பட்டாணி குருமா

0
57


பனீர்சுமார் 100 g

பச்சைப் பட்டாணி_1/2

கைப்பிடி சின்ன வெங்காயம்_10 தக்காளி_1 பெரியது இஞ்சிசிறு துண்டு
தேங்காய் பத்தை3 பூண்டிதழ்_3 மிளகாய்த்தூள்ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்சிறிது எலுமிச்சை சாறு கொத்துமல்லி தழைஒரு கொத்து
புதினாஒரு கொத்து எண்ணெய்,உப்புதேவைக்கு
உணவு செய்முறை :
Step 1.
முதலில் பச்சைப்பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்துவிட‌வும்.வெங்காயம்,தக்காளி இவற்றை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்..இஞ்சி & பூண்டு தட்டிக்கொள்ள‌வும்.அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,பின்னர் இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்

Step 2.
பிறகு வெங்காயம் & தக்காளி அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம்போக நன்றாக வதக்கவும். அடுத்து பட்டாணியை சேர்த்து வதக்கிவிட்டு,பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து மூடி கொதிக்க விடவும்.குருமா கொதி வருவதற்குள் ஒரு கடாய் அல்லது தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விடவும்.

Step 3.
பனீரை சிறுசிறு துண்டுகளாக்கி,எண்ணெய் சூடானதும் கடாயில் போட்டு,பனீரின் எல்லா பக்கங்களும் லேஸாக நிறம் மாறும் வரை வதக்கி எடுக்கவும்.அல்லது நறுக்கிய துண்டுகளை அப்படியேகூட‌ சேர்த்துக்கொள்ள‌லாம்.குருமா கொதிக்க ஆரம்பித்ததும் பனீர் துண்டுகளை சேர்த்து கிண்டிவிட்டு கொதிக்க‌விடவும். குருமா நன்றாகக் கொதித்த பிறகு தேங்காய்,கஸகஸா,முந்திரி இவற்றை மைய அரைத்து குருமாவுடன் சேர்த்து கலக்கிவிடவும். எல்லாம் சேர்ந்து கொதித்ததும் எலுமிச்சை சாறு,கொத்துமல்லி,புதினா சேர்த்து இறக்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here