Mint Potato முறுக்கு சாப்பிட்டுறீங்களா…

0
58

கால் கிலோ உருளைக்கிழங்கு வேண்டும் இதற்கு. குக்கரில் வைத்து நன்றாக வேக வைத்து தோலுரித்து நன்றாக mash பண்ணிக்கொள்ளுங்கள். ஒரு கட்டு புதினாவை ஆய்ந்து, மண் போக கழுவி மிக்சியில் நீர் விட்டு நன்றாக அரைக்கவும். சில சமயம் மிக்சியில் அரைத்தால் திப்பி திப்பியாக இருக்கும். அப்படி இருந்தால் வடிகட்டிக்கொள்ளவும். ஒரு டம்ளர் புதினா சாறு தேவை.
மசித்த உருளைக்கிழங்குடன் ஒரு கிலோ அரிசி மாவு சேர்த்து வையுங்கள். இந்த அளவுக்கு 50gm வறுத்து அரைத்த உளுந்து மாவு தேவை. ரெண்டு மாவுகளையும் கிழங்கையும் நன்றாக கட்டிகள் இல்லாமல் பிசையவும். இதில் உப்பு, பெருங்காயம், விரும்பினால் காரம், சாட் மசாலா தூள் சேர்த்து (சீரகம் சேர்ப்பதும் அவரவர் விருப்பம்) புதினா சாறை use பண்ணி மாவு பிசையவேண்டும். தேன்குழல் அச்சில் பிழிந்தால் ரெடி.

மாவு கிழங்குடன் சேரும்போது காய்ந்துவிடும். கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து புதினா சாறு கலந்த நீர் உபயோகித்து முறுக்கு பிழிந்தால் கடைசி வரை கர கரப்பாக ஒரே நிறத்தில் முறுக்கு கிடைக்கும்.

கடையில் இதை aloo bhujia என்ற பெயரில் வாங்கி சாப்பிட்டிருப்பீர்கள்… அப்படி ஓமப்பொடியாக செய்ய விரும்பினால் சீரகம் போட வேண்டாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here