பூண்டு மோர்

0
192

தேவையானவை: மோர் – ஒரு கப், தோல் நீக்கிய பூண்டு – 4 பல், சீரகம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கறிவேப்பிலையை அலசி சுத்தம் செய்யவும். பூண்டு, கறிவேப்பிலை, சீரகத்தை ஒன்று சேர்த்து நைஸாக அரைக்கவும். இதனுடன் மோரைக் கலந்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, உப்பு சேர்த்து, குளிர வைத்து பருகலாம்.

குறிப்பு: காரம் அதிகம் விரும்புவோர்… பூண்டு, கறிவேப்பிலை, சீரகத்தை அரைக்கும்போது ஒரு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here