இலங்கை

நாட்டில் நடைபெறவிருக்கும் எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய பரந்த கூட்டணியொன்றை உருவாக்கி புதிய சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரபல ஊடகம் ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது அதற்காக பல சின்னங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்த்துக் களமிறங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுபான்மை சமூகங்களின் ஆதரவில் மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடித்து வெற்றிபெற்றார். அப்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு 6217162 வாக்குகளும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு 5768090 வாக்குகளும் கிடைத்தன. இதன்படிContinue Reading