இன்றைய சமையல் குறிப்பு (Page 3)

🥗அம்மா சமையல் 🥗

சூப்பரான மட்டன் குடல் குழம்பு

🍱தேவையான பொருட்கள் :

ஆட்டு குடல் - 750 கிராம்
வெங்காயம் - 4
தக்காளி - 4
தேங்காய் - ஒரு மூடி அரைத்தது (கசகசாவுடன் )
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா - கொஞ்சம்
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு

🍴செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.(தயிர், மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும்)

* குக்கரில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, மஞ்சள் தூள் சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி (கொஞ்சம் தாராளமாக ) பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின் நறுக்கின வெங்காயதை போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

* அடுத்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து மைய வதக்கவும்.

* இப்பொழுது மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* அடுத்து வேக வைத்த குடலை போடவும்.

* நன்றாக கொதி வரும் போது அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* ஓரங்களில் எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வரும் போது கொத்தமல்லி, புதினா தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

* இட்லிக்கு சரியான டிஷ் இந்த மட்டன் குடல் குழம்பு தான்.

🥗அம்மா சமையல் 🥗 சூப்பரான மட்டன் குடல் குழம்பு 🍱தேவையான பொருட்கள் : ஆட்டு குடல் – 750 கிராம் வெங்காயம் – 4 தக்காளி – 4 தேங்காய் – ஒரு மூடி அரைத்தது (கசகசாவுடன் ) இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன் பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா – கொஞ்சம் மிளகாய்த்தூள் – தேவையான அளவு மல்லித்தூள் – ஒரு ஸ்பூன் கரம் மசாலாContinue Reading

வெங்காயமானது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நச்சுக் கிருமிகளை அழிக்க உதவுகிறது. இது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள வெங்காயத்தை நமது பற்களின் அடியில் வைத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். *பல்வலிக்கு மருந்து* ஒரு வெங்காயத்தை மெல்லிசாக வெட்டி, அதை நமது பற்களின் அடியில் கீழ் பகுதியில் வைத்தால், தாங்க முடியாத பல்வலி விரைவில் குறைந்துவிடும். பல்வலி ஆரம்பத்தில் இருக்கும் போதேContinue Reading

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.Continue Reading

காடை குழம்பு பொருட்கள் 1. காடை – 4 2. பெரிய வெங்காயம் – 2 3. கரம் மசாலா தூள் – ஒன்றரை டேபிள் ஸ்பூன் 4. கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி 5. புதினா – ஒரு கைப்பிடி 6. கறிவேப்பிலை – 2 கொத்து 7. பச்சை மிளகாய் – 2 8. தயிர் – கால் கப் 9. மஞ்சள் தூள் –Continue Reading

சமையல் குறிப்புகள்! தேவையானப் பொருட்கள்: புதினா – ஒரு கட்டு கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி சிவப்பு மிளகாய் – பேஸ்ட் ஒரு தேக்கரண்டி மைதா – அரை கிலோ சீரகப்பொடி, மிளகுப் பொடி – தலா அரை தேக்கரண்டி வெண்ணெய் – 100 கிராம் உப்பு, எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: புதினா, கறிவேப்பிலை இரண்டையும் மைய அரைத்துக் கொள்ளவும். அத்துடன் மைதா, சீரகப்பொடி, மிளகுப்பொடி, மிளகாய்Continue Reading

*சுவையான முட்டை தோசை செய்வது எப்படி? தேவையானவை தோசைமாவு – ஒருகப் பெரிய வெங்காயம் – ஒன்று தக்காளி – ஒன்று முட்டை – ஒன்று பச்சை மிளகாய் – ஒன்று மிளகுத்தூள் -கால் தேக்கரண்டி சீராக தூள் – கால் தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு மல்லி இலை – சிறிதளவு செய்முறை முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளாகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளContinue Reading

பல மருத்துவ குணங்கள் கொண்ட சேப்பங்கிழங்கு சேப்பங்கிழங்கு நன்மைகள்: இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாக கொண்ட இந்த சேப்பங்கிழங்கு, நமது இந்திய நாடு முழுவதும் தற்போது பயிரிடப்பட்டு வருகிறது. இந்த சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால்Continue Reading

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்…!! தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுபவர்களுக்கு அஜரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலே நோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம். வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்Continue Reading

கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.* *⚜கும்பகோணத்தை சுற்றினால் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.* கோவில் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் என்றால் அது கும்பகோணம் தான். இங்கு பல்வேறு விதமான கோவில்கள் உள்ளன. அதிலும் நவக்கிரகங்கள் கொண்ட கோவில்கள் மிகவும் அதிகம். அதிகப்படியானோர் இந்த பகுதிக்கு தோஷங்களை நீக்க மற்றும்Continue Reading