ஸ்ரீ காளி மஹிமை:

0
18

காளிமாதா னு சொன்னதும் பயங்கரமான ரூபம் அவோ கையில் கொண்டுள்ள பொருள்களும், தரித்திருக்கும் ஆபரணங்களும் நம்மில் பலருக்கு ஒரு விதமான பயத்தை உண்டு பண்ணும் . அவள் பயங்கரி, உக்ரமானவள் னு நினைச்சுண்டு அவளிடம் நெருங்க தயங்குவோம்!!

ஆனால் உண்மைமையில் பராமனந்தமும் ப்ரேமையும் நிறைந்த கருணாமூர்த்தியாகிய இந்த தேவியை பார்த்து நாம் பயப்படனும்னு அவச்யமில்லை

அவளுடைய ரூபமும் இத்யாதி ஆபரணங்களும், ஸ்வரூபத்தில் உள்ள பல லக்ஷணங்களும் வேதாந்த ஸாரமான விஷயங்கள் , மந்தரசாஸ்த்ர தத்துவங்கள்!!

உதாரணமா தேவியின் விரிந்து பரவி நர்தனமாடும் அவள் கேசம் கூட இவள் கட்டிலடங்காநிலையில் உள்ள பரப்ரஹ்ம்மதின் ஸகுண ரூபம் ங்கிற உண்மையை சொல்லவே!! .

இவள் தேஹத்தில் வஸ்த்ரம் இல்லாமல் இருப்பது இவோ குணங்கடந்த கோலத்தையும், நிர்குணஸ்வரூபிணீ என்ற தத்துவத்தை பளிச்சுனு காட்டவே!! .

தன் இடது மேற்கரத்தில் தாங்கும் வாள் ஞான ஸக்தியின் சின்னம்.

இடதுகீழ் கரத்தில் உள்ள வெட்டப்பட்ட ஸிரஸானது யோகாப்யாஸம் பண்ண ஒரு யோகியானவன் ப்ரபஞ்சத்தில் எல்லா பற்றுகளும் துறந்து ஆனந்தத்தில திளைத் திருப்பதைக் காட்டும் தத்வம்.

தன் இடுப்பில் வெட்டப்பட்ட கரங்களை கோத்த மேகலையை சூடியிருப்பது கர்மயோக ஸித்தியின் மகிமையை நமக்கு எடுத்து சொல்லவே!!.

இவள் ஸ்ரீ மஹாகாளரின் ஹ்ருதயத்தில் வலதுபாதம் வைச்சு ஸதா ஆடிக் கொண்டிருப்பது கூட ஜீவன்முக்தனின் நித்யானந்த நிலையைக் காட்டவே!! .

பரம கருணாமூர்த்தியாகிய பராஸக்தி, தன் குழந்தைகளாகிய எல்லா ஜீவன்களையும் ரக்ஷிக்கும் ஆனந்தத்தில் திளைச்சு ஸந்தோஷித்து ஆனந்த நர்தனம் பண்ணி அருளைப் பொழியும் வேளையில் தனது வலது பாதத்தை ஸ்ரீ மகாகாளரின் ஹ்ருதய ஸ்தானதிலே வைச்சுண்டுருக்கா.

ஜகந்மாத்ரூகையின் பாதத்தை தாங்கி களிப்படையும் ஸ்ரீ மஹாகாளர், தேவியின் காருண்யத்தையும், ஷக்தியையும் பார்த்து தன் இயல்பான இயக்கம்
செயல் இல்லாது போவதை உணர்கிறார்.

செயலற்றுப் போன மஹாகாளர் ஒரு சவம் போல் கீழே கிடந்து தேவியின் ஆனந்த நடனத்தை ரொம்ப ஸந்தோஷத்தோடு அனுபவிச்சுண்டு இருக்கார்.

இந்த நிலையை த்யானிக்கும், எந்த உபாஸகனும் தானும் அந்த பேரானந்த பரவசத்தில் மூழ்கி சிவத்துவம் அடைவானே தவிர பீதிக்கு இரையாக மாட்டான்.

இந்த தேவியின் வழிப்பாட்டு க்ரமத்தில் பலியிடுதல் ஒரு அம்ஸம். ஜீவன்களோட ப்ராணன அபஹரித்து அர்ப்பணம் பன்றது தான் பலி னு நாம் எடுத்துக்கப்படாது.

தேவியை உபாஸிப்பவர்கள் தங்களுக்குள் ஒளிச்சிருக்கும் காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம் மாத்ஸ்ர்யம் ங்கிற ஷட் ஸத்ருக்களை
தேவியின் மந்தர ஜபம் ங்கிற ஹோம அக்னியில் ஹவிஸே இந்த பலி ஸம்ப்ரதாயம்!!

காளிங்கிறோவோ அந்த மஹாகாளராலயே புரிஞ்சுக்க முடியாத பரப்ரஹ்ம்ம ஸ்வரூபிணி!!

காளி மந்த்ரங்களுக்கு கட்டுப்படவோ நினைச்சா அதுவும் நம்ம அறியாமை தான் ஏன்னா இவ மந்த்ரத்திற்க்கே விஷேஷமா வித்யாராக்ஞீ ங்கிற பெயர் அதாவது மந்த்ரங்களுக்கெல்லாம் ஆதியானவள் காளி மந்த்ரம் தான்!!

வித்யைகளுக்கெல்லாம் மஹாராக்ஞீ நம் காளீ தான்!!

இப்பேர்ப்பட்ட அந்த லோகமாதவை இந்த ஜன்மத்துலயாவது அவளை பத்தி தெரிஞ்சுனுட்டோம் இதுவும் அவ கருணை னு நினைச்சு அவளை பூர்ணஸரணாகதி பண்ணனுமே தவிர்த்து ஆராயப்படாது!!

“ஸ்வதந்த்ரா” அவள் யாருக்கும் கட்டுப்படாதவோ ஆனால் அவளுக்கேதான் பக்திவச்யா ங்கிற நாமமும்!!

ஸம்பந்தாண்டான் மாதிரி அஞ்ஞானத்தோடு பூஜிக்காமல் தெனாலி ராமனை போல குழந்தை மாதிரியும் ராமக்ருஷ்ணரை போல ஸ்ரத்தா தாஸ்ய பாமர பக்தியோட அவளை சரணடைவோம்!!

இப்போ நம்மையும் அறியாமல் நம் மனஸு சொல்லும் சரணம் “காளிகே”னு!!

ஸ்ரீ மஹா காள்யை நம:

ஜய ஜகதம்ப ஸிவே!!
ஜய ஜய காமாக்ஷீ!!!

🟫🟨🟫🟨🟫🟨🟫🟨
*.•♫•♬• ༺꧁᪣🇩 🇪 🇻 🇪 🇳 🇩 🇷 🇦 🇳  🇨 🇭 🇪 🇳 🇳 🇦 🇮  ᪣꧂༻ •♫•♬•*