குண்டோதரனுக்கு_அன்னமிட்ட_படலம்_7ம்_திருவிளையாடல்

1
74

குண்டோதரனுக்கு_அன்னமிட்ட_படலம்_7ம்_திருவிளையாடல்

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் விருந்தில் கலந்து கொண்டனர், வகை வகையான உணவுகளை உண்டு மகிழ்ந்து தாம்பூலமும் சந்தனப்பூச்சும் ஆடைகளும் ஆபரணங்களும் பெற்று கொண்டு சுந்தரேசரை வணங்கி சென்றனர். விருந்திணர்களுக்கு திருப்தியாக உணவளித்த பின்னரும் பெருமளவு உணவு மீந்துள்ளது என்பதை தடாதகையிடம் தெரிவித்தனர்.

சுந்தரேசரிடம் பூதங்கணங்களுக்கு பெருமளவு உணவு தேவைப்படலாம் என்று எண்ணி சமைத்த உணவு மணம் கெட்டு வீணாகிவிடும் என்று கவலை தெரிவித்தார் தடாதகை.

சுவாமி தன் அருகில் குடை பிடித்து நிற்கின்ற குள்ளமான குண்டோதரனின் வயிற்றில் பசியை தூண்டினார். பசி மிகவும் அதிகமாக குண்டோதரன் சுவாமியிடம் வேண்டி நின்றான். சுவாமி உத்தரவு தர அந்த குள்ள பூதம் உணவு இருக்கும் இடத்திற்கு சென்றது. மலை மலையாய் குவித்து வைத்திருந்த அண்ணத்தை க்ஷண பொழுதில் தின்று தீர்த்தது. வெந்தது வேகாதது அரிசி, பருப்பு பச்சை காய்கறிகள் ஏன் வாழைஇலை கூட விட்டு வைக்கவில்லை அனைத்தயையும் தின்று தீர்த்தும் பசி அடங்கவில்லை. நாவரட்சியில் தண்ணீர்காக அங்கும் இங்கும் அலைந்தே குளம், குட்டை, ஏறி என அனைத்து நீர் நிலைகளில் உள்ள தண்ணீரை குடித்தும் தாகம் அடங்கவில்லை.

இதனையறிந்த தடாதகை சுந்தரேசரை அனுகினாள். அனைத்தும் உணர்ந்த சுந்தரேசர் ஒன்றுமறியாதவர்போல் “இங்கு நிறைய உணவு கிடைக்கும் என்று நினைக்கவில்லை என்னுடன் இந்த ஒரு பூதகணம் தான் குடைபிடித்து வந்தான், உணவு நிறைய இருக்குமானால் மற்ற பூத கணங்களை நொடி பொழுதில் வர செய்கிறேன் ” என்று கூற. அவர்களும் வந்தால் இந்த உலகமே அழிந்து விடும் ப்ரளயருத்ரர் என்ற உங்களுடைய பெயருக்கு பொருளாய் அமைந்துவிடும். இந்த ஒரு பூதத்தின் பசியை கூட போக்க முடியவில்லை என்று வேண்டி நின்றாள்.

இந்த லீலையை யார் யார் கேட்கிறார்களோ பல்லாயிரம் ஜீவராசிகளுக்கு உணவளித்த புண்ணியம் வந்து சேரும்.

உணவு பறிமாறும் போது ஏற்ற தாழ்வு பார்த்தோ ஆணவத்துடனோ உணவளிக்க கூடாது என்று உணர்த்தினார் சுந்தரேசர். 🙌🙏

மஹாதேவ… தொடரும்

#ஸ்ரீமீனாட்சி_சொக்கநாதா 🙌🙏🌷

1 COMMENT

Comments are closed.