யார் இவர்:-நடிகர்மயில் சாமி

யார் இவர்:-நடிகர்மயில் சாமி
Nadigar mayilsamy

நடிகர் அவர்கள் ஈரோடு அருகிலுள்ள சத்திய மங்கலம் ஊரைச் சேர்ந்தவர். 

              1984ல் இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த தாவணிக் கனவுகள் படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்து திரைக்கு அறிமுகமான நடிகர் 
மயில்சாமி அவர்கள் நடிகர், இயக்குனர் பாண்டியராஜன் அவர்கள் இயக்குனராக அறிமுகமான கன்னிராசி படத்தில் மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்பவராக நடித்தார்.

              என் தங்கச்சி படிச்சவ, வெற்றி விழா, செந்தமிழ்பாட்டு, பணக்காரன், உழைப்பாளி, டூயட், வாய்மையே வெல்லும், சுந்தர புருஷன், கில்லி,ஜெயம், ரெண்டு, எங்கள் ஆசான், அம்பாசமுத்திரம் அம்பானி, கோரிப் பாளையம், எத்தன், வீட்ல விசேஷம், நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட 140 படங்களில் நடித்துள்ளார். 

              சன் டி.வி.யில் காமெடி டைம், அசத்தப் போவது யாரு போன்ற  நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.

                செல்வா படத்தில் நடிகர் மணிவண்ணன் அவர்களுக்கும் நியூ படத்தில் நடிகர் பிரம்மானந்தம் அவர்களுக்கும் உள்ளம் கொள்ளை போகுதே படத்திலும் டப்பிங் குரல் அளித்துள்ளார்..