பிபோர்ஜாய்' புயல் மையம்

கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ள பிபோர்ஜாய்' புயல்,- வானிலை மையம் தகவல்

பிபோர்ஜாய்' புயல் மையம்

கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ள பிபோர்ஜாய்' புயல்,- வானிலை மையம் தகவல்

மத்தியகிழக்கு அரபிக்கடலில் உருவான 'பிபோர்ஜாய்' புயல், கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ளது.
புதுடெல்லி,

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள 'பிபோர்ஜோய்' என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும்.

இந்த புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலால் கேரளா முதல் மராட்டிய மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறினர்.

இந்நிலையில் தற்போது 'பிபோர்ஜாய்' புயல், கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, தொடர்ந்து வடக்கு-வடகிழக்கில் நகர்ந்து செல்லும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றூம் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.