ராசி பலன்கள்

கார்த்திகை: 29 வியாழன்-கிழமை 15- 12- 2022

ராசி பலன்கள்

மேஷம் ராசி: 
பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக சொந்த ஊர் பயணங்களை மேற்கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் பொறுமையுடன் செயல்படவும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முடிவு காண்பீர்கள். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

அஸ்வினி : பொறுமையுடன் செயல்படவும்.
பரணி : ஆர்வம் அதிகரிக்கும்.
கிருத்திகை : லாபம் உண்டாகும். 

 

ரிஷபம் ராசி:  
பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். உறவினர்களின் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். பிறரை விமர்சிப்பதால் தேவையற்ற இன்னல்கள் உண்டாகும். பழைய கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள். தாயின் ஆதரவால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.

கிருத்திகை : வெற்றி பெறுவீர்கள்.
ரோகிணி : இன்னல்கள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : உயர்வான நாள்.

 

 மிதுனம் ராசி: 
புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வாழ்க்கையில் மாற்றமான தருணங்கள் ஏற்படும். பிள்ளைகளுடன் வெளியே சென்று வருவீர்கள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். அந்நியர்களின் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.

மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.
திருவாதிரை : அன்யோன்யம் அதிகரிக்கும். 
புனர்பூசம் : ஆதரவான நாள்.

 

 கடகம் ராசி: 
வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உறவினர்களையும், நண்பர்களையும் பற்றி புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். வெளியூர் பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை.

புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
பூசம் : நன்மை உண்டாகும். 
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

சிம்மம் ராசி: 
நெருக்கமானவர்களின் மூலம் திருப்தியின்மையான சூழல் அமையும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அலைச்சல்கள் உண்டாகும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். வாகனங்கள் தொடர்பான செலவுகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

மகம் : திருப்தியின்மையான நாள்.
பூரம் : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திரம் : எதிர்ப்புகள் நீங்கும். 

 

கன்னி ராசி: 
பயனற்ற செலவுகளை குறைத்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் கைகூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த தனவரவு கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறுவதில் சிறு சிறு தடங்கல் ஏற்படும். மனை சம்பந்தமான விரயங்கள் உண்டாகும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

உத்திரம் : பயணங்கள் கைகூடும்.
அஸ்தம் : விரயங்கள் உண்டாகும். 
சித்திரை : முடிவு கிடைக்கும். 

 துலாம் ராசி:
நண்பர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். எண்ணங்களில் புதுவிதமான மாற்றம் ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபடுவீர்கள். உறுதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

சித்திரை : ஆதரவு கிடைக்கும். 
சுவாதி : வாய்ப்புகள் அமையும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

 

விருச்சிகம் ராசி: 
கூட்டு தொழிலில் லாபம் மேம்படும். தொழில் சம்பந்தமான உதவி கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொண்டு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி சம்பந்தமான விஷயங்களில் பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். உதவி செய்யும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

விசாகம் : உதவி கிடைக்கும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : ஒற்றுமை உண்டாகும்.

 

தனுசு ராசி: 
மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். கலைத்துறை சார்ந்த கல்வியில் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். நிர்வாகம் சார்ந்த புதிய முடிவுகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்.

மூலம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
பூராடம் : நம்பிக்கை அதிகரிக்கும். 
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.

 

 மகரம் ராசி: 
குடும்பத்தில் நெருக்கடியான சூழல் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் கவனமும் பொறுமையும் அவசியம். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமற்ற சூழல் அமையும். ஞாபக மறதியால் சில இன்னல்கள் ஏற்படும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். பேச்சில் நிதானமும், பொறுமையும் வேண்டும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.

உத்திராடம் : நெருக்கடியான நாள்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும். 
அவிட்டம் : பொறுமை வேண்டும். 

 

கும்பம் ராசி. 
மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். வியாபார பணிகளில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான எண்ணங்கள் கைகூடும். நண்பர்களின் வழியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

அவிட்டம் : வாய்ப்புகள் அமையும்.
சதயம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரட்டாதி : மேன்மை உண்டாகும். 

 

 மீனம் ராசி: 
சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடத்தில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.

பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
ரேவதி : ஒத்துழைப்பான நாள்.