சந்திரயானில் இருந்து பிரிந்த லேண்டரின் சுற்றுப்பாதை உயரம் குறைப்பு

சந்திரயானில் இருந்து பிரிந்த லேண்டரின் சுற்றுப்பாதை உயரம் குறைப்பு

நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதிஇஸ்ரோ விண்ணில் செலுத்தியது.அதன்பின் பூமியை சுற்றிவந்தவிண்கலம் ஆக.1-ம் தேதி புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும் வகையில் அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. தொடர்ந்து 5 நாள் பயணத்துக்கு பின் கடந்த 5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சந்திரயான் நுழைந்தது.

இதையடுத்து சந்திரயானின் சுற்றுப்பாதை உயரம் 4 முறை குறைக்கப்பட்டு நிலவுக்கு அருகேவிண்கலம் கொண்டு செல்லப்பட்டது. நிலவின் தரையில் இருந்து 153கி.மீ உயரத்தில் இருக்கும்போது சந்திரயானின் உந்துவிசை கலனில்இருந்து லேண்டர் நேற்று முன்தினம்வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.