கருவேப்பிலை துவையல் செய்வது எப்படி
சுவையான துவையல்
கறிவேப்பிலை இலைகள் – ரெண்டு கப், சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், தனியா விதைகள் – ரெண்டு டீஸ்பூன், உளுந்து – 2 டீஸ்பூன், வர மிளகாய் – இரண்டு, இஞ்சி – சிறிதளவு, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, வெல்லம் – ஒரு சிறு துண்டு, உப்பு – தேவையான அளவு, தேங்காய் துருவல் அரை கப்.
செய்முறை ;
முதலில் கறிவேப்பிலை இலைகளை இரண்டு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைக்கப் அளவிற்கு தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பை ஆன் செய்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் ரெண்டு வரமிளகாய்களை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் தனியா விதைகள் மற்றும் உளுந்து ஆகியவற்றை போட்டு வறுக்க வேண்டும்.
வறுத்ததும் இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேருங்கள். இவை வதங்கியதும் கருவேப்பிலை இலைகளை சேர்த்து வதக்க வேண்டும். ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை நார், விதைகள் நீக்கி உருட்டி எடுத்து சேருங்கள். பின்னர் நன்கு வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.
கருவேப்பிலை இலைகள் நன்கு ஆறியதும் இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் அரை கப் அளவிற்கு நீங்கள் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்க்க வேண்டும். பிறகு இந்த துவையலுக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் முதலில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.