பாதுகாப்பு படையில் 540 காலியிடங்கள்

மத்தியல் தொழில் பாதுகாப்பு படையின் www.cisfrectt.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பாதுகாப்பு படையில் 540 காலியிடங்கள்
CISF

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள உதவி துணைக் காவல் ஆய்வாளர்( Assistant - Sub Inspector)  காவல்துறையின் தலைமை காவலர் பதவிகளுக்கான (Head Constable - Ministerial) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள்: 540

சம்பள நிலை:  

துணைக் காவல் ஆய்வாளர்( Assistant - Sub Inspector)  பணி: நிலை 5  ரூ. 29,200-92,300/-

தலைமை காவலர் பதவி (Head Constable - Ministerial) நிலை 4: ரூ. 25,500-81,100/

வயது வரம்பு:  இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க 25.10.2022 அன்று 18க்கு மேலும், 25க்கு கீழும் இருக்க வேண்டும். பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்து ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும். ஓபிசி பிரிவினர் 3 ஆண்டுகள் வரை சலுகை பெற தகுதியுடைவர்கள்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்டவாரியத்தின் மூலம்  10, +2 பாடத் திட்ட முறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் வண்ண பாஸ்போர்ட் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அது தேர்வு அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 3 மாதத்துக்கு மேல் பழையதாக இருக்க கூடாது என்றும் கூறப்படுகிறது.

தெரிவு செய்யப்படும் முறை: உடல்தகுதித் தேர்வில் தகுதி விண்ணப்பதாரைகள் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின், திறனறிவுத் தேர்வு, மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்படுவார்கள். எவ்வாறாயினும், எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? 

மத்தியல் தொழில் பாதுகாப்பு படையின் www.cisfrectt.in என்ற  அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.