மத்திய அரசின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் காப்பீடு அட்டை பெறு வதற்கான சிறப்பு முகாம்

மத்திய அரசின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் காப்பீடு அட்டை பெறுவ வதற்கான சிறப்பு முகாமில் பலர் கலந்துகொண்டனர்

மத்திய அரசின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் காப்பீடு அட்டை பெறு வதற்கான சிறப்பு முகாம்
அரியலூர் - முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு மற்றும் மத்திய அரசின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் காப்பீடு அட்டை பெறுவ வதற்கான சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
 
அரியலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும்  பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளை சேர்ப்பதற்கான சிறப்பு காப்பீட்டு திட்ட பதிவு முகாம் அரியலூர் நகராட்சி மற்றும் செந்துறையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடைபெற்று வருகிறது முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தொடங்கி வைத்து காப்பீடு திட்டத்தில் புதிதாக தங்களை சேர்ப்பதற்காக வந்துள்ள அனைவரும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து காப்பீடு திட்டத்தில் சேர்ந்து காப்பீடு அட்டை பெற்று பயனடைய வேண்டும் மேலும் இதில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் விரைவாக பயனாளிகளின் பெயர்களை காப்பீடு திட்டத்தில் சேர்க்க விரைந்து செயல்பட வேண்டும் எனவும்  அறிவுறுத்தினார் முகாமில் புதிய பயனாளிகளின் குடும்ப அட்டை ஆதார் கார்டு ஆகியவற்றின் ஆவணங்களோடு பயனாளிகளின் கைரேகை மற்றும் கண் விழி ஆகியவை பதிவு செய்ய ப்படுகிறது இந்த காப்பீடு திட்டத்தில் பயனாளிகள் 5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு பெற முடியும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் வகையில் புதிய பயனாளிகள் ஆர்வத்துடன் முகாமில் கலந்து கொண்டனர்