8 வயது சிறுமி மலைச்சிகரங்களில் சாதனை படைத்துள்ளார்.

பஞ்சாபை சேர்ந்த 8 வயது சிறுமி மலைச்சிகரங்களில் சாதனை படைத்துள்ளார்.

8 வயது சிறுமி மலைச்சிகரங்களில் சாதனை படைத்துள்ளார்.

உலகம் முழுவதும் சிறுவர், சிறுமிகள் படிப்பு, விளையாட்டுகளில் மட்டுமே ஆர்வம் காட்டுவர். அதில் சிலர் மட்டுமே விதிவிலக்கு. அவர்கள் வேறு துறைகளில் கவனம் செலுத்துவர்.

 அவர்களில் ஒருவர் பஞ்சாபைச் சேர்ந்த 8 வயது சிறுமி சான்வி சூட். ரூப்கர் மாவட்டத்தை சேர்ந்த தீபக்சூத் என்பவரின் மகளான சான்வி சூத், மலையேற்றத்தில் சாதனை படைத்து வருகிறார்.

கடந்தாண்டு, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம் சிறுமி என்ற சாதனை படைத்தார்.

அதேபோல், கடந்தாண்டு ஜூலை மாதம் தென் ஆப்ரிக்காவில் உள்ள 5,895 மீ., உயரத்தில் அமைந்துள்ள கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறி மற்றொரு சாதனை படைத்ததாக அவரது தந்தை பெருமிதத்துடன் கூறுகிறார்.

இந்தாண்டும் சிறுமியின் சாதனை முயற்சிகள் நிற்கவில்லை.

 கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவின் உயரமான மலைச்சிகரமான கோஸ்சியுஸ்கோவில்(2,228 மீ.,உயரம்) ஏறினார்.

 கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவின் எல்பரஸ் சிகரத்தில் ஏறி, இளம் வயதில் இந்த சிகரத்தில் ஏறிய சிறுமி என்ற சாதனையை படைத்தார்.

சிறுமியின் சாதனையை பாராட்டி, சுதந்திர தினத்தன்று நடந்த விழாவில் முதல்வர் பக்வந்த் மான், சான்வி சூட்டிற்கு விருது வழங்கி பாராட்டினார்.