இதை பயன் படுத்தினால் முகப்பரு சரியாகுமா...

பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று முகப்பரு. சிலர் க்ரீம், எண்ணெய் என்று ஏதேதோ பூசியும் அதைக் குணப்படுத்த முடியாமல் அவதிப் படுவார்கள்

இதை பயன் படுத்தினால் முகப்பரு சரியாகுமா...
thottasinungi

உலகில் முதன்முதலில் தோன்றியதாகக் கூறப்படும் தாவரங்களுள் ஒன்று தொட்டாச்சிணுங்கி. தொட்டவுடன் சுருங்கும் தன்மை கொண்டதால் தொட்டாச்சுருங்கி எனப் பெயர் வந்து, காலப்போக்கில் தொட்டாச்சிணுங்கி என்று மருவியதாகச் சொல்லப்படுகிறது.

தொட்டாச்சிணுங்கியில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வளரக் கூடியது. மற்றொன்று, சாதாரண இடங்களில்கூட வளரக்கூடியது. `மைமோசாபூடிகா' என்ற தாவரவியல் பெயர்கொண்ட தொட்டாச்சிணுங்கி மூலிகையானது சித்த மருத்துவத்தில் கூட்டு மருந்து தயாரிக்கப் பயன் படுகிறது. காயங்களில் இருந்து வெளியேறும் ரத்தம் சிலருக்கு உறையாது. அப்படிப்பட்ட நேரத்தில் இது பலனளிக்கும். சித்த வைத்தியத்தில், ரத்தத்தை உறைய வைக்கத் தயாரிக்கப்படும் மருந்தில் தொட்டாச்சிணுங்கி பயன்படுத்தப்படுகிறது. தொட்டாச்சிணுங்கி இலை களுடன் சீரகம், வெங்காயம் சேர்த்து மையாக அரைத்து மோருடன் கலந்து குடித்து வந்தால், பெண்களுக்கு வரும் பெரும்பாடு என்னும் அதிக ரத்தப்போக்கு சரியாகும். சிலருக்கு எவ்வளவு சிகிச்சை அளித்தாலும் சிலவகை குழிப்புண்கள் ஆறாமல் இருக்கும். தொட்டாச்சிணுங்கி இலையின் சாற்றை அத்தகைய  குழிப்புண்களின்மீது விட்டு வெற்றிலை வைத்துக் கட்டினால், அவை ஆறிவிடும். இந்த சிகிச்சையை சில நாட்கள் தொடர்ந்து செய்து வர  வேண்டும்.

பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று முகப்பரு. சிலர் க்ரீம், எண்ணெய் என்று ஏதேதோ பூசியும் அதைக் குணப்படுத்த முடியாமல் அவதிப் படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தொட்டாச் சிணுங்கி இலைகளை மையாக அரைத்து முகத்தில் பூசி, சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு முகத்தைக் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு உதிர்ந்துவிடும்.

கைகால் மூட்டு வீக்கம், விரைவாதம் உள்ளவர்கள் தொட்டாச்சிணுங்கி இலையை மெழுகுபோல் அரைத்துத் தடவி வந்தால் குணம் கிடைக்கும். தொட்டாச்சிணுங்கி செடியின் வேர்க்கஷாயத்தை குடித்துவந்தால் கல்லடைப்பு சரியாகும். தொட்டாச்சிணுங்கி சமூலத்தின் (முழுச்செடி) சாற்றை மூலப் புண்கள், பவுத்திர புண்களின்மீது பூசினால் குணமாகும். புரையோடிப் போன புண்களின்மீது இந்த சமூலச்சாற்றை பஞ்சில் நனைத்து பூசினால் குணம் கிடைக்கும்.  இதன் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துக் குடித்து வந்தால் மூலநோய் குணமாகும்.