தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மன்னர் திருமலை  நாயக்கர்கல்லூரியில் சிறப்பு அறிவியல் கண்காட்சி

தமிழ்நாடு அரசு அறிவியல் தொழில்நுட்பம் மையம் மற்றும் தேசிய இந்திரகாந்தி அணு ஆராய்ச்சி மையம் இணைந்து சிறப்பு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மன்னர் திருமலை  நாயக்கர்கல்லூரியில் சிறப்பு அறிவியல் கண்காட்சி
மதுரை மன்னர் கல்லூரியில் முதன் முதலில் நடைபெறும் அணு ஆராய்சி மையம் சார்பில் நடைபெரும் அறிவிய கண்காட்சியில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மன்னர் திருமலை கல்லூரியில் தேசியதினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில அறிவியல் வளர்ச்சி கழகம் மற்றும் மன்னர் திருமலை கல்லூரி இணைந்து சிறப்பு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.  அறிவியல் கண்காட்சியை மன்னர் கல்லூரி செயலாளர் விஜயராகவன் துவக்கிவைத்தார்.
மதுரை காவல் துணை ஆணையர் ஆறுமுகசாமி, முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்ரமணியன். மன்னர் கல்லூரி கணித துறை தலைவர் ஹாமாரி சௌதிதமிழ்நாடு அறிவியல் வளர்ச்சி கழகச் செயலாளர் சீனிவாசன் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலைய உதவியுடன் தென் மாவட்ட மக்கள் அணு உலைகள் மற்றும் கதிர் விச்சுகள் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

இந்திரா காந்தி அனு ஆராய்ச்சி மைய மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜலஜா மதன் மோகன் கூறுகையில்  அணுக்கதிரை கண்டு மக்கள் பயப்படத் தேவை இல்லை என்றும் அணுக்கதிர்வீச்சுகளை நவீன தொழில்நுட்பத்துடன் மருத்துவ ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மக்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால் மக்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தும் முறைகள் தான் தற்போது உள்ளது.

அணு உலையில் இருந்து அணுக்கள் பிளக்கப்பட்டு கணநீர் மூலம் குளிர்வித்து மின்சாரம் தயாரித்தல் மற்றும் அணுக்கதிர்கள் மூலம் நவீன ஸ்கேன் கருவிகள் தயாரித்தல் போன்றவை சிறப்பு அம்சம் எனவும்  இப்போது பொறியியல் கல்லூரிகள் தான் அதிகமாக உள்ளது அறிவியல் கல்லூரிகள் இல்லை .
அறிவியல் கல்லூரியில் மூலம் நிறைய மாணவர்கள் முன் வந்தால் ஆராய்ச்சி தொழில்நுட்பம் வளரும் மேலும் முன்பாக முன்பெல்லாம் தென்னிந்திய மக்கள் அதிகமாக அறிவியல் தொழில்நுட்பம் பாடங்களை படித்தனர் .

தற்போது மிகவும் குறைவாக உள்ளனர் வருங்கால மாணவர்கள் இயற்பியல் வேதியியல் படித்து ஆராய்ச்சியை குறித்து ஆய்வு செய்ய முன் வந்தால் பல்வேறு சாதனைகள் புரியலாம் நிறைய வேலை வாய்ப்புகளும் உள்ளது அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.  அறிவியல் கண்காட்சி மையத்தை பல்வேறு பள்ளி கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்.

அணு சக்தி துறை குறித்து மதுரையில் நடைபெறும் முதல் கண்காட்சி என்பதால் . ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மன்னர் திருமலை கல்லூரி கணிதவியல் மற்றும் இயற்பியல் துறை ஏற்பாடுகளை செய்திருந்தது