உலக பக்க வாத தினம்

மனிதரின் இயல்பான வாழ்க்கைகக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோய்களில் ஒன்றாக இருக்கிறது

உலக பக்க வாத தினம்
Stroke

மனிதரின் இயல்பான வாழ்க்கைகக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோய்களில் ஒன்றாக பக்கவாதம் இருக்கிறது. பாதிக்கப்பட்டடோரின் உறுப்புகள் செயலிழப்பதால் வாழ்க்கை முழுவதும் அப்படியே வாழும் சூழல் தான் இன்று வரை தொடர்கிறது. உலக அளவில் பக்கவாதம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டு தோறும் அக்டோபர் 29 ம் தேதி உலக பக்க வாத தினம் ( World Stroke Day, October 29) அனுசரிக்கப்படுகிறது. பக்கவாதம் நிரந்தரமான நரம்புச் சிதைவு அல்லது மரணத்தை ஏற்படுத்தும். உலக அளவில் இறப்புக்கான காரணங்களில் இது மாரடைப்புக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. விரைவில் இது முதல் இடத்துக்கு வரக்கூடும் எனக் கருதப்படுகிறது. பக்க வாதம் - விளக்கம்

மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ரத்தம் மூளைக்கு செல்வது தடைபட்டால் ஏற்படும் பாதிப்பை பக்கவாதம் என்கிறோம். மூளைக்கு செல்லும் குருதியின் அளவு குறையும்போது மூளையின் உயிரணுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும், பிராண வாயுவும் கிடைக்காமல் போவதனால், பாதிக்கப்படும் மூளையின் பகுதி செயற்பட முடியாமல் போய், உடலின் ஒரு பக்கத்திலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உடல் உறுப்புக்கள் இயங்க முடியாமல் போகிறது. அத்துடன், புரிந்துகொள்ள முடியாமை, ஒழுங்காகப் பேசமுடியாமை, பார்வை பாதிப்பு போன்றவையும் ஏற்படலாம். இதனால் கை அல்லது கால் செயல் அற்றுப் போகும். சரியாக பேச்சு வராது. மூளையின் ஒரு பகுதி செயல்படாததால் ஞாபகசக்தி இருக்காது. பக்கவாதம் வந்ததற்கு அறிகுறிகளாக வாய் கோணல் ஏற்படும். வார்த்தைகள் குளறும். - பொதுவாக பக்கவாதத்தினால், உடலின் ஒரு பக்கமே இவ்வாறு பாதிப்படைகிறது. மூளையின் எப்பகுதி தாக்கத்துக்கு உட்படுகிறதோ, அதற்கு எதிரான உடலின் பக்கமே பாதிப்புக்குள்ளாகிறது.

இவற்றில் ஏதாவது அறிகுறி தெரிந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
55 முதல் 65 வயதுக்கு மேல் இந்த நோய் பாதிப்புக்கான சாத்தியம் இரு மடங்காகிறது. பாரம்பரியமாகவும் இந்த நோய் வருவதாக அறியப்பட்டுள்ளது. * உயர் ரத்த அழுத்தம் பக்கவாதத்துக்கான முதன்மை காரணமாக இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்போது பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு குறைகிறது * பெண்களை விட ஆண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்த போதிலும் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களில் இறப்பது பெண்களிளே அதிகமாக இருக்கிறார்கள். பெண்கள் சாப்பிடும் கர்ப்பத்தடை மருந்துகள், கர்ப்ப நிலைகள் பாதிப்புக்கான காரணமாக இருக்கின்றன. மாரடைப்பு ஏற்பட்டாலும்  பக்கவாதம் ஏற்படும் சாத்தியம் அதிகம்.  * புகைப்பிடிப்பவர்களுக்கு அதிகளவில் பக்கவாத நோய் ஏற்படுகிறது.  * நீரிழிவு நோய் உள்ளவர்களில் இந்த நோய்த் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். நீரிழிவு நோய் உள்ளவர்களில் உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், அதிக உடல் பருமன் போன்வற்றால் இந்தப் பாதிப்பு வரக்கூடும். *  அளவுக்கு அதிகமான மதுபானம், கொக்கெயின், ஹெரோயின் போன்ற போதை மருந்துக்கு அடிமையானவர்களில் இந்த பக்கவாத நோய்த் தாக்கம் அதிகரிக்கிறது. பக்கவாததிற்கான அறிகுறிகள் பொதுவில் திடீரென சில வினாடிகளிலிருந்து சில நிமிடங்களில் தோன்றுபவையாக இருக்கும். அவை பொதுவாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு போவதில்லை. ஏற்படும் பாதிப்பானது, மூளை எவ்வளவு தீவிரமாக பாதிப்படைந்திருக்கிறது என்பதைப் பொறுத்து அமையும்.

* முகத் தசைகளில் ஏற்படும் தளர்ச்சி, கையை தூக்க முடியாமல் போதல், அசாதாரணமாக பேசுதல் போன்றவை என்பவை பக்கவாத நோயை கண்டு பிடிப்பதில் முக்கிய அறிகுறிகள். * முகம், கை, கால்களில் திடீரென தளர்வும், உணர்வற்ற தன்மையும் ஏற்படல். இது பொதுவாக உடலின் ஒரு பக்கம் மட்டும் ஏற்படல்.     * வாய் ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளல், விழுங்குதல் கடினமாதல்   * திடீரென ஏற்படும் குழப்பம், பேச முடியாமையும், கிரகிக்க முடியாமையும்.     * திடீரென ஒரு கண்ணிலோ, இரண்டிலுமோ பார்வைப் புலன் குறைவடைதல், அல்லது முற்றாக அற்றுப் போதல்   * திடீரென நடக்க முடியாமல் போதல், உடற் சமநிலை குழம்புதல்,     * காரணம் தெரியாமல் திடீரென ஏற்படும் தீவிர தலைவலி, மற்றும் மயக்க உணர்வு ஏற்படல்

பக்கவாதமானது உடனடியாக தீவிர சிகிச்சை கொடுக்கப்பட வேண்டியதாகும். சிகிச்சை மூலம் மூளைக்கு ஏற்படும் கூடுதல் பாதிப்புக்கள் தடுக்க முடியும். மேலும் பக்கவாதம் ஏற்படுத்தக் கூடிய காரணிகளைக் கட்டுப்படுத்தி, மீண்டும் ஏற்படாமல் தடுக்க முடியும்.

* பக்கவாதத் தாக்குதல் இருந்தால் உடலில் நீரற்றநிலை (Dehydration) ஏற்படும் சாத்தியம் அதிகம் இருப்பதால், உடனடியாக நாளம் மூலம் திரவம் வழங்கப்படும்.

* மூளை செல்களுக்கு போதியளவு ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதிப்படுத்த செயற்கையாக ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும்.                                                                                                               
* மூளையில் போதியளவு ரத்த ஓட்டம் ஏற்பட, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க மருந்துகள் வழங்கப்படும்.

* மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் அதை சரி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

* பக்கவாதத்துடன் வரும் நோயாளிகளுக்கு பொதுவாக உடனடியாக ஆஸ்பிரின் மாத்திரை கொடுக்க மாட்டார்கள் விழுங்கும் தன்மையை கண்டுபிடிக்கும் வரை வரை நீர் ஆகாரமோ, உணவோ வாய் மூலமாக கொடுக்க மாட்டார்கள்.

* சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்து மூளை பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக ஆர்.டி.பி.. என்ற ரிகாம்பினன்ட் டிஸ்யூ பிளாஸ்மினோஜன் ஆக்டிவேட்டர் என்ற ஊசி மருந்தை செலுத்துவார்கள். அது செலுத்தினால் பாதிக்கப்பட்ட மூளையின் பகுதி மீண்டும் செயல்படத் தொடங்கும். இந்த ஊசி மருந்தின் விலை சுமார் ரூ.44,000. இந்த ஊசி மருந்தை பக்கவாதம் ஏற்பட்ட 4 மணி நேரத்திற்குள் போட்டுக் கொண்டால் மூளையில் உறைந்த ரத்தம் முழுவதும் அகற்றப்பட்டு பக்கவாதம் 100 முற்றிலும் குணமாகிவிடும்.
- * பக்கவாத நோயால் ஏற்படும் பாதிப்புகள் வெவ்வேறாக இருப்பதால், பராமரிப்பும் அதற்கு ஏற்ப அமையும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரை கூடிய வரையில் இயல்பு வாழ்க்கை வாழ தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.. * நோயாளி படுக்கையிலேயே இருந்தால், படுக்கைப் புண் ஏற்படுவதைத் தவிர்க்க வசதி செய்து கொடுக்க வேண்டும். இதற்காக 2&3 மணி நேரத்துக்கு ஒரு முறை நோயாளி படுத்திருக்கும் பக்கத்தை மாற்ற வேண்டும். உடலின் மேல் பகுதியை உலர்வாகவும் சுத்தமாகவும் பராமரித்து வர வேண்டும். * நோயாளிக்கு நடப்பது கஷ்டமாக இருந்தால், சக்கர நாற்காலி, ஊன்றுகோல் போன்றவற்றின் உதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.   * தேவைப்படும் உடற்பயிற்சி, பேச்சுப்பயிற்சி உள்ளிட்டவை வழங்க வேண்டும்.                                               * நோயாளிக்கு சரிவிகித உணவு மற்றும் போதியளவு தண்ணீர் குடிக்க கொடுப்பதும் மிக அவசியம். * நோயாளியின் கட்டுப்பாடின்றி சிறுநீர் வந்தால், செயற்கை சிறுநீர்க் குழாய் பொருத்தப்பட்டு, பராமரிப்பவருக்கு அந்தக் குழாயைப் பயன்படுத்துதல் மற்றும் பராமரிப்பு பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். * நோயாளியால் எதையும் விழுங்க இயலாது என்றால், நாசியறை- இரைப்பைக் குழாய் பொருத்தப்பட்டு, அதன் மூலம் தண்ணீர், உணவு போன்றவை கொடுக்க வேண்டும். இந்தக் குழாயும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். பக்க வாதம் தடுப்பது எப்படி? - * சீரான உடற்பயிற்சி அவசியம் தேவை. எதற்கும் பதற்றப்படக் கூடாது.                                                                                                       * எப்போதும் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.                                                         * எல்லாவற்றுக்கும் மேலாக அதிகமாக மது அருந்தக் கூடாது.                                    * பழவகைகள், காய்கறி உணவுகள் இந்த நோய் தாக்கத்தை குறைக்கிறது.           * உயர் ரத்த அழுத்தம் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இருந்தால் அதுவே, பக்கவாதம் ஏற்படக் கூடிய காரமாக மாறிவிடும். பக்கவாத பாதிப்புக்கு இது சுமார் 70% காரணமாக இருக்கிறது. எனவே, ரத்த அழுத்தம் அடிக்கடி பரிசோதிக்கப்பட்டு, உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். * 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொலஸ்ட்ரால் அளவை பரிசோதனை செய்து வர வேண்டும் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். * இதயத் துடிப்பு ஒழுங்கற்று இருந்தால், அதனை சாதாரண நிலைக்கு கொண்டு வர மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். * பக்கவாதம் ஏற்படுவதற்கான மிக அதிகரி வாய்ப்பு உள்ளவர்களுக்கு ஆஸ்பிரின் மாத்திரை கொடுப்பார்கள்.    * நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். பக்கவாத பாதிப்புக்கு இது சுமார் 30% காரணமாக இருக்கிறது.  ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளுதல் அவசியம். * பீடி, கிகரெட் புகைத்தல் அறவே தவிர்க்கப்பட வேண்டும்.     -

மனிதரின் இயல்பான வாழ்க்கைகக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோய்களில் ஒன்றாக பக்கவாதம் இருக்கிறது. பாதிக்கப்பட்டடோரின் உறுப்புகள் செயலிழப்பதால் வாழ்க்கை முழுவதும் அப்படியே வாழும் சூழல் தான் இன்று வரை தொடர்கிறது. உலக அளவில் பக்கவாதம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டு தோறும் அக்டோபர் 29 ம் தேதி உலக பக்க வாத தினம் ( World Stroke Day, October 29) அனுசரிக்கப்படுகிறது. பக்கவாதம் நிரந்தரமான நரம்புச் சிதைவு அல்லது மரணத்தை ஏற்படுத்தும். உலக அளவில் இறப்புக்கான காரணங்களில் இது மாரடைப்புக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. விரைவில் இது முதல் இடத்துக்கு வரக்கூடும் எனக் கருதப்படுகிறது. பக்க வாதம் - விளக்கம்

மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ரத்தம் மூளைக்கு செல்வது தடைபட்டால் ஏற்படும் பாதிப்பை பக்கவாதம் என்கிறோம். மூளைக்கு செல்லும் குருதியின் அளவு குறையும்போது மூளையின் உயிரணுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும், பிராண வாயுவும் கிடைக்காமல் போவதனால், பாதிக்கப்படும் மூளையின் பகுதி செயற்பட முடியாமல் போய், உடலின் ஒரு பக்கத்திலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உடல் உறுப்புக்கள் இயங்க முடியாமல் போகிறது. அத்துடன், புரிந்துகொள்ள முடியாமை, ஒழுங்காகப் பேசமுடியாமை, பார்வை பாதிப்பு போன்றவையும் ஏற்படலாம். இதனால் கை அல்லது கால் செயல் அற்றுப் போகும். சரியாக பேச்சு வராது. மூளையின் ஒரு பகுதி செயல்படாததால் ஞாபகசக்தி இருக்காது. பக்கவாதம் வந்ததற்கு அறிகுறிகளாக வாய் கோணல் ஏற்படும். வார்த்தைகள் குளறும். - பொதுவாக பக்கவாதத்தினால், உடலின் ஒரு பக்கமே இவ்வாறு பாதிப்படைகிறது. மூளையின் எப்பகுதி தாக்கத்துக்கு உட்படுகிறதோ, அதற்கு எதிரான உடலின் பக்கமே பாதிப்புக்குள்ளாகிறது.

இவற்றில் ஏதாவது அறிகுறி தெரிந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
55 முதல் 65 வயதுக்கு மேல் இந்த நோய் பாதிப்புக்கான சாத்தியம் இரு மடங்காகிறது. பாரம்பரியமாகவும் இந்த நோய் வருவதாக அறியப்பட்டுள்ளது. * உயர் ரத்த அழுத்தம் பக்கவாதத்துக்கான முதன்மை காரணமாக இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்போது பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு குறைகிறது * பெண்களை விட ஆண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்த போதிலும் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களில் இறப்பது பெண்களிளே அதிகமாக இருக்கிறார்கள். பெண்கள் சாப்பிடும் கர்ப்பத்தடை மருந்துகள், கர்ப்ப நிலைகள் பாதிப்புக்கான காரணமாக இருக்கின்றன. மாரடைப்பு ஏற்பட்டாலும்  பக்கவாதம் ஏற்படும் சாத்தியம் அதிகம்.  * புகைப்பிடிப்பவர்களுக்கு அதிகளவில் பக்கவாத நோய் ஏற்படுகிறது.  * நீரிழிவு நோய் உள்ளவர்களில் இந்த நோய்த் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். நீரிழிவு நோய் உள்ளவர்களில் உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், அதிக உடல் பருமன் போன்வற்றால் இந்தப் பாதிப்பு வரக்கூடும். *  அளவுக்கு அதிகமான மதுபானம், கொக்கெயின், ஹெரோயின் போன்ற போதை மருந்துக்கு அடிமையானவர்களில் இந்த பக்கவாத நோய்த் தாக்கம் அதிகரிக்கிறது. பக்கவாததிற்கான அறிகுறிகள் பொதுவில் திடீரென சில வினாடிகளிலிருந்து சில நிமிடங்களில் தோன்றுபவையாக இருக்கும். அவை பொதுவாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு போவதில்லை. ஏற்படும் பாதிப்பானது, மூளை எவ்வளவு தீவிரமாக பாதிப்படைந்திருக்கிறது என்பதைப் பொறுத்து அமையும்.

* முகத் தசைகளில் ஏற்படும் தளர்ச்சி, கையை தூக்க முடியாமல் போதல், அசாதாரணமாக பேசுதல் போன்றவை என்பவை பக்கவாத நோயை கண்டு பிடிப்பதில் முக்கிய அறிகுறிகள். * முகம், கை, கால்களில் திடீரென தளர்வும், உணர்வற்ற தன்மையும் ஏற்படல். இது பொதுவாக உடலின் ஒரு பக்கம் மட்டும் ஏற்படல்.     * வாய் ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளல், விழுங்குதல் கடினமாதல்   * திடீரென ஏற்படும் குழப்பம், பேச முடியாமையும், கிரகிக்க முடியாமையும்.     * திடீரென ஒரு கண்ணிலோ, இரண்டிலுமோ பார்வைப் புலன் குறைவடைதல், அல்லது முற்றாக அற்றுப் போதல்   * திடீரென நடக்க முடியாமல் போதல், உடற் சமநிலை குழம்புதல்,     * காரணம் தெரியாமல் திடீரென ஏற்படும் தீவிர தலைவலி, மற்றும் மயக்க உணர்வு ஏற்படல்

பக்கவாதமானது உடனடியாக தீவிர சிகிச்சை கொடுக்கப்பட வேண்டியதாகும். சிகிச்சை மூலம் மூளைக்கு ஏற்படும் கூடுதல் பாதிப்புக்கள் தடுக்க முடியும். மேலும் பக்கவாதம் ஏற்படுத்தக் கூடிய காரணிகளைக் கட்டுப்படுத்தி, மீண்டும் ஏற்படாமல் தடுக்க முடியும்.

* பக்கவாதத் தாக்குதல் இருந்தால் உடலில் நீரற்றநிலை (Dehydration) ஏற்படும் சாத்தியம் அதிகம் இருப்பதால், உடனடியாக நாளம் மூலம் திரவம் வழங்கப்படும்.

* மூளை செல்களுக்கு போதியளவு ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதிப்படுத்த செயற்கையாக ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும்.                                                                                                               
* மூளையில் போதியளவு ரத்த ஓட்டம் ஏற்பட, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க மருந்துகள் வழங்கப்படும்.

* மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் அதை சரி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

* பக்கவாதத்துடன் வரும் நோயாளிகளுக்கு பொதுவாக உடனடியாக ஆஸ்பிரின் மாத்திரை கொடுக்க மாட்டார்கள் விழுங்கும் தன்மையை கண்டுபிடிக்கும் வரை வரை நீர் ஆகாரமோ, உணவோ வாய் மூலமாக கொடுக்க மாட்டார்கள்.

* சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்து மூளை பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக ஆர்.டி.பி.. என்ற ரிகாம்பினன்ட் டிஸ்யூ பிளாஸ்மினோஜன் ஆக்டிவேட்டர் என்ற ஊசி மருந்தை செலுத்துவார்கள். அது செலுத்தினால் பாதிக்கப்பட்ட மூளையின் பகுதி மீண்டும் செயல்படத் தொடங்கும். இந்த ஊசி மருந்தின் விலை சுமார் ரூ.44,000. இந்த ஊசி மருந்தை பக்கவாதம் ஏற்பட்ட 4 மணி நேரத்திற்குள் போட்டுக் கொண்டால் மூளையில் உறைந்த ரத்தம் முழுவதும் அகற்றப்பட்டு பக்கவாதம் 100 முற்றிலும் குணமாகிவிடும்.
- * பக்கவாத நோயால் ஏற்படும் பாதிப்புகள் வெவ்வேறாக இருப்பதால், பராமரிப்பும் அதற்கு ஏற்ப அமையும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரை கூடிய வரையில் இயல்பு வாழ்க்கை வாழ தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.. * நோயாளி படுக்கையிலேயே இருந்தால், படுக்கைப் புண் ஏற்படுவதைத் தவிர்க்க வசதி செய்து கொடுக்க வேண்டும். இதற்காக 2&3 மணி நேரத்துக்கு ஒரு முறை நோயாளி படுத்திருக்கும் பக்கத்தை மாற்ற வேண்டும். உடலின் மேல் பகுதியை உலர்வாகவும் சுத்தமாகவும் பராமரித்து வர வேண்டும். * நோயாளிக்கு நடப்பது கஷ்டமாக இருந்தால், சக்கர நாற்காலி, ஊன்றுகோல் போன்றவற்றின் உதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.   * தேவைப்படும் உடற்பயிற்சி, பேச்சுப்பயிற்சி உள்ளிட்டவை வழங்க வேண்டும்.                                               * நோயாளிக்கு சரிவிகித உணவு மற்றும் போதியளவு தண்ணீர் குடிக்க கொடுப்பதும் மிக அவசியம். * நோயாளியின் கட்டுப்பாடின்றி சிறுநீர் வந்தால், செயற்கை சிறுநீர்க் குழாய் பொருத்தப்பட்டு, பராமரிப்பவருக்கு அந்தக் குழாயைப் பயன்படுத்துதல் மற்றும் பராமரிப்பு பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். * நோயாளியால் எதையும் விழுங்க இயலாது என்றால், நாசியறை- இரைப்பைக் குழாய் பொருத்தப்பட்டு, அதன் மூலம் தண்ணீர், உணவு போன்றவை கொடுக்க வேண்டும். இந்தக் குழாயும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். பக்க வாதம் தடுப்பது எப்படி? - * சீரான உடற்பயிற்சி அவசியம் தேவை. எதற்கும் பதற்றப்படக் கூடாது.                                                                                                       * எப்போதும் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.                                                         * எல்லாவற்றுக்கும் மேலாக அதிகமாக மது அருந்தக் கூடாது.                                    * பழவகைகள், காய்கறி உணவுகள் இந்த நோய் தாக்கத்தை குறைக்கிறது.           * உயர் ரத்த அழுத்தம் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இருந்தால் அதுவே, பக்கவாதம் ஏற்படக் கூடிய காரமாக மாறிவிடும். பக்கவாத பாதிப்புக்கு இது சுமார் 70% காரணமாக இருக்கிறது. எனவே, ரத்த அழுத்தம் அடிக்கடி பரிசோதிக்கப்பட்டு, உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். * 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொலஸ்ட்ரால் அளவை பரிசோதனை செய்து வர வேண்டும் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். * இதயத் துடிப்பு ஒழுங்கற்று இருந்தால், அதனை சாதாரண நிலைக்கு கொண்டு வர மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். * பக்கவாதம் ஏற்படுவதற்கான மிக அதிகரி வாய்ப்பு உள்ளவர்களுக்கு ஆஸ்பிரின் மாத்திரை கொடுப்பார்கள்.    * நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். பக்கவாத பாதிப்புக்கு இது சுமார் 30% காரணமாக இருக்கிறது.  ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளுதல் அவசியம். * பீடி, கிகரெட் புகைத்தல் அறவே தவிர்க்கப்பட வேண்டும்

ஆண்டு தோறும் அக்டோபர் 29 ம் தேதி உலக பக்க வாத தினம் ( World Stroke Day, October 29) அனுசரிக்கப்படுகிறது.