அருமையான விசயத்துக்கு முருங்கைப் பூ குழம்பு

முருங்கைப் பூவை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் குழம்பில்

அருமையான விசயத்துக்கு முருங்கைப் பூ குழம்பு
முருங்கைப் பூ குழம்பு

என்னென்ன தேவை?

உலர்ந்த முருங்கைப் பூ - 1 கைப்பிடி
இஞ்சி - 30 கிராம்
பூண்டு - 1 பல்
பச்சைப் பயறு - 30 கிராம்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
பெருங்காயம் - 1 சிட்டிகை
கொத்தமல்லி விதை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நெய் - 4 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

பச்சைப் பயறை மிதமான சூட்டில் மணம் வரும் வரை வறுக்கவும். தோல் நீக்கிய இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு, கொத்தமல்லி விதை, வறுத்த பச்சைப் பயறு என அனைத்தையும் அரைத்துத் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பிறகு முருங்கைப் பூவை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் குழம்பில் சேர்த்துக் கொதிக்க விடவும்.

தேவையெனில் சிறிதளவு எலுமிச்சை சாறும் வெல்லமும் சேர்க்கலாம். உடல் வலிமையைத் தரும் முருங்கைப் பூ குழம்பு ரெடி. இதில் இரும்புச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி தரும். இதனால் தலைவலி, முடி உதிர்வு சரியாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடலாம்.