சர்வதேச உடல் உறுப்பு தான தினம்

உடல் உறுப்பு தானம் செய்யவிருப்பம் உள்ளவர்கள் முதலில்தனது விருப்பத்தை

சர்வதேச உடல் உறுப்பு தான தினம்
UdalUruppu

சர்வதேச உடல் உறுப்பு தான தினம் (World Organ Donation Day) - ஆகஸ்டு 13  அன்று அனுசரிக்கப்படுகிறது.உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்கு உட்பட்டுதனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது அப்பா, அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள்,கணவன், மனைவி ஆகிய 8 உறவுகளுக்குள் மட்டும்) 2 சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலின் ஒருபகுதியை தானமாக வழங்க முடியும். உயிரிழந்த ஒருவரிடமிருந்த கண்களை (கருவிழியை) தானமாகப் பெற முடியும்.

உடல் உறுப்பு தானம் செய்யவிருப்பம் உள்ளவர்கள் முதலில்தனது விருப்பத்தை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். பின்னர், தமிழக அரசின் www.tnos.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான அடையாள அட்டையையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்தவர்கள் கண்டிப்பாக உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தானம் செய்தவர் இயற்கையாக இறந்தாலோ அல்லது மூளைச்சாவுஅடைந்தாலோ அவரது குடும்பத்தினர்களின் அனுமதியுடன்தான் உறுப்புகள் தானமாக பெறப்படும்.

உறுப்பு தானத்தை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த2008-ல் உறுப்பு தானத் திட்டத்தைதொடங்கியது. இத்திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளில் யாராவது மூளைச் சாவு ஏற்பட்டு, அவரது உறுப்புகளை தானம்செய்ய குடும்பத்தினர் முன்வந்தால், தமிழ்நாடு உடல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை ஆணையம் வழியாக முன்னுரிமை வரிசை அடிப்படையில் தேவைப்படும் நோயாளிகளுக்கு, அவர்கள் பதிவுசெய்த மருத்துவமனைக்கு வழங்கப்படும். இதில், மூளைச்சாவு அடைந்தவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை, ஏதாவது ஒரு உறுப்பை மட்டும் (உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி பெற்றிருந்தால்), அங்கு உறுப்பு தானம் கேட்டு பதிவு செய்த ஒருவருக்கு வழங்க முடியும்.

நாட்டில் உடல் உறுப்புகளை தானமாக பெற 5 லட்சம் பேர் பதிவுசெய்து காத்திருக்கின்றனர். இதில்,ஆண்டுக்கு 2 லட்சம் பேர் சிறுநீரகம் பெற காத்திருக்கும் நிலையில் 8 ஆயிரம் பேருக்கும். கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சைக்கு 50 ஆயிரம் பேர் காத்திருக்கும் நிலையில் 1,700 பேருக்கும், 15 ஆயிரம் பேர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் நிலையில் 250 பேருக்கும் மட்டுமே உறுப்புகள் கிடைக்கின்றன. உறுப்பு தானம் தேவைப்படுபவர்களில் 90 சதவீதம்பேர் தேவையான உறுப்பு கிடைக்காமலேயே உயிரிழக்கின்றனர்.