புதிதாக வாங்கிய மண்சட்டியை பழக்க எளிய வீட்டு குறிப்பு

மண்சட்டி சீக்கிரம் உடையாது, நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கும். மேலும், சமைக்கும் உணவிலும் மண் சுவை சிறப்பாக கூடும்.

புதிதாக வாங்கிய மண்சட்டியை பழக்க எளிய வீட்டு குறிப்பு

நவீன சமையல் பாத்திரங்கள் அதிகம் இருந்தாலும், மண்சட்டியின் முக்கியத்துவம் இன்றும் குறைந்துவிடவில்லை. மண்சட்டியில் சமைக்கும் உணவின் சுவையும் ஆரோக்கியமும் தனி வகை. தற்போது மீண்டும் பலர் வீடுகளில் மண் சட்டிகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். ஆனால், புதிய மண்சட்டியை எப்படிப் பழக்க வேண்டும் என்பது தெரியாமல் திணறும் நிலையும் இருக்கிறது.

இதோ, புதிதாக வாங்கிய மண்சட்டிகளை பழக்க எளிய முறைகள்:

முதற்கட்டம் - தண்ணீர் ஊறல்

புதிய மண் சட்டி, கடாய், பானை எதுவாக இருந்தாலும், அதை முதலில் ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, பண்டங்கள் முழுமையாக மூழ்கும் வண்ணம் வைத்திருக்க வேண்டும்.

இரண்டாம் கட்டம் - வெயில் காய்வு

24 மணி நேரம் ஊறிய பின், தண்ணீரை வடித்து, சட்டிகளை சுத்தமாக புறப்படுத்தி, வெயிலில் 2-3 மணி நேரம் நன்றாக காய வைக்க வேண்டும்.

மூன்றாம் கட்டம் - எண்ணெய் தடவல்

காய்ந்த மண்சட்டிக்கு வீட்டில் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை உள்ளும் வெளியும் தடவ வேண்டும். எண்ணெய் சட்டியில் நன்றாக உறைந்துவிட்டதும், அடுத்தகட்டத்தை தொடரலாம்.

நான்காம் கட்டம் - அரிசி தண்ணீர் ஊறல்

அதற்குப் பிறகு, அரிசி கழுவிய தண்ணீர் அல்லது அரிசி வடித்த கஞ்சி சேர்த்து சட்டியை நிரப்பி, ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். பிறகு தண்ணீரை கழற்றி, சோப்பால் கழுவி சுத்தமாக்க வேண்டும்.

இறுதிக் கட்டம் - பயன்பாடு தொடக்கம்

இப்போது உங்கள் மண்சட்டி சமையலுக்கு தயார்! அடுப்பில் வைத்து சாதாரணமாக சமைத்துப் பயன்படுத்தலாம். இதை செய்தால் மண்சட்டி சீக்கிரம் உடையாது, நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கும். மேலும், சமைக்கும் உணவிலும் மண் சுவை சிறப்பாக கூடும்.

சிறப்பு குறிப்பு:

தண்ணீர் பருகும் பானைகளுக்கும் இதே முறையை பின்பற்றலாம்.


உங்கள் வீட்டிலும் புதிய மண்சட்டிகளை இந்த முறையில் பழகி பயன்படுத்துங்கள்.