ரஷ்யாவில் கடைகள் திறக்க இந்தியாவுக்கு புதின் அழைப்பு
30 சதவீத தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியை இந்தியா வாங்கி வரும் நிலையில் இந்திய சூப்பர் மார்க்கெட்களை
ரஷ்யாவிடம் இருந்து 30 சதவீத தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியை இந்தியா வாங்கி வரும் நிலையில் இந்திய சூப்பர் மார்க்கெட்களை திறக்க அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.
கச்சா எண்ணெயை தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து நிலக்கரியை இந்தியா 30 சதவீத தள்ளுபடி விலையில் வாங்கி வருகிறது. இந்த வர்த்தகத்தை தொடர்ந்து இந்தியாவில் இருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய ரஷ்யா நடவடிக்கை எடுத்து வருகிறது.
மே மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ள கச்சா எண்ணெய் சாதனை அளவை எட்டியுள்ளது. இதனால் மே மாதத்தில் இந்தியாவுக்கு மிக அதிக அளவு கச்சா எண்ணெய் விற்பனை செய்த நாடுகளின் வரிசையில் 2-வது இடத்துக்கு ரஷ்யா முன்னேறியுள்ளது.