நாயை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
மதுரை காளவாசல் பகுதியில் பயன்பாடின்றி கிடந்த சுமார் சுமார் 30 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்றில் சிறிய நாய்க்குட்டி ஒன்று தவறி விழுந்துள்ளது.
மதுரையில் கிணற்றில் விழுந்த நாயை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களின் மனிதாபிமான செயலுக்கு குவியும் பாராட்டுகள்.
மதுரை காளவாசல் பகுதியில் பயன்பாடின்றி
கிடந்த சுமார் சுமார் 30 அடி ஆழம் கொண்ட
கிணறு ஒன்றில் சிறிய நாய்க்குட்டி ஒன்று தவறி விழுந்துள்ளது.
தொடர்ந்து அச்சத்தில் குறைத்து கொண்டிருந்த நாய்க்குட்டியை
மீட்க அக்கம்பக்கத்தினர் முயற்சித்தும் குட்டியை மீட்க முடியாததால்
மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தவுடன்
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் விழுந்த
நாயை பத்திரமாக மீட்டனர். தகவல் தெரிவித்த உடனே சம்பவ இடத்திற்கு வந்து
மனிதாபிமான முறையில் நாயின் உயிரை மீட்ட
தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.