இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் விடுதலைக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உறுதி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமேஸ்வரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள ராமேஸ்வரம் வருகை தந்து தனியார் தங்கு விடுதியில் மீனவர்களை சந்தித்து பேசினார்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் விடுதலைக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உறுதி
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் விடுதலைக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உறுதி
மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமனை  மீனவர்கள் சந்தித்து 
 இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளை  விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்து  மனு அளித்தனர். விரைவில் மீனவர்களும் படகுகளும்  விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் உறுதி அளித்த  நிதியமைச்சர்.
 
மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன்   ராமேஸ்வரத்தில்  நடைபெறும் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள   ராமேஸ்வரம் வருகை தந்து  தனியார் தங்கு விடுதியில்  மீனவர்களை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில்  விசைப்படகு, நாட்டுப்படகு  மீனவர்கள்  மற்றும் மீனவ குடும்பங்கள்  மத்திய நிதி அமைச்சர் சந்தித்து  மீனவர்களின் குறைகளை  தெரிவித்து மனு கொடுத்தனர்.
 
மேலும் இலங்கை வசம் உள்ள  தமிழக மீனவர்கள் சொந்தமான 133 படகு உரிமையாளர்களுக்கு மறுவாழ்வுத் திட்டத்தில்  நிவாரணம் வழங்க வேண்டும்.  இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்  இன்று சிறைபிடிக்கப்பட்டுள்ள பாம்பன்  நாட்டுப்படகு  மீனவர்கள் 22 பேரையும்  இரண்டு படகுகளை விடுதலை செய்ய வேண்டும் என  நிதி அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நிதியமைச்சர்  இன்று சிறைபிடிக்கப்பட்டுள்ள  பாம்பன்  நாட்டு படகு மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்ய  வெளிவரவுத்துறை செயலாளர் மற்றும் இலங்கை துணை தூதராக அதிகாரியை  மொபைல் போனில் தொடர்பு கொண்டு  விடுதலை செய்ய வலியுறுத்தினார்.   
 அதனடிப்படையில் நாட்டுப் படகு மீனவர்கள்  சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இலங்கை அரசிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நிதியமைச்சர் கேட்டுக்கொண்டதன் படி மீனவர்கள் 22 பேரும் விடுதலை செய்யப்பட்டு இலங்கையில் இருந்து மீனவர்கள் படகுடன் புறப்பட்டனர்.