கேட்டு கேட்டு சாப்பிட கேழ்வரகு இட்லி
சுவையான கேழ்வரகு இட்லி தயார் செய்வது எப்படி??

செய்முறை பெயர் :-
கேழ்வரகு இட்லி
மூலப்பொருள் :-
1. பொருள் - அளவு
2. கேழ்வரகு - கால் கிலோ
3. உளுத்தம் பருப்பு - 1 கப்
4. வெந்தயம் - கால் டேபிள் ஸ்பூன்
5. உப்பு - தேவைக்கேற்ப
விளக்கம் :-
1. கேழ்வரகை சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். உளுந்தையும் சுத்தம் செய்து வெந்தயம் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
2. வழக்கமாக இட்லிக்கு அரைப்பது போல் உளுந்தை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. கேழ்வரகை சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.
4. அரைத்த உளுந்து மாவுடன் கேழ்வரகு மாவைச் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அத்துடன் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் வரை புளிக்கவிட வேண்டும்.
5. மறுநாள் மாவு புளித்து தயாராக இருக்கும். வழக்கம் போல் இட்லி ஊற்றலாம். சுவையான சத்தான கேழ்வரகு இட்லி தயார்.
6. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : காரச் சட்னி, தேங்காய் சட்னி