மீன்பிடி தடைக்காலம்முடிவு

தூத்துக்குடியில் மீன் பிடி தடை காலத்திற்கும் பின்னர் இன்று மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

மீன்பிடி தடைக்காலம்முடிவு
தூத்துக்குடியில் மீன் பிடி தடை காலத்திற்கும் பின்னர் இன்று மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
 
 
தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் பதினைந்தாம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு இருந்தது இந்த தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றுள்ளனர். 
 
இன்று இரவு 10 மணிக்கு இவர்கள் கரை திரும்புவார்கள் 60 நாட்களுக்குப் பிறகு செல்வதால் அதிக அளவில் மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியோடு இந்த மீனவர்கள் சென்றனர்.
 
தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம் வேம்பார் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து விசைப்படகு மீனவர்கள் இன்று மீன் பிடிக்க புறப்பட்டு சென்றனர்.