2024 ஜனவரியில் இவ்வளவு நாள் விடுமுறையா..?

நடப்பாண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

2024 ஜனவரியில் இவ்வளவு நாள் விடுமுறையா..?

பொது மக்களின் வாழ்வில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, டிமாண்ட் டிராஃப்ட் பெறுதல் மற்றும் காசோலைகளை டெபாசிட் செய்தல் போன்ற பல செயல்பாடுகளுக்காக ஏராளமானோர் தினமும் வங்கிக்கு வந்து செல்கின்றனர்.

 

இந்நிலையில் நடப்பாண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. விடுமுறைக்கிணங்க பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

 

ஜனவரி 2024 இல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட திருவிழாக்கள், ஆண்டு விழாக்கள் மற்றும் பிற நிகழ்வுகள் என மொத்தம் 16 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். (மாநிலங்களின் முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்கள் ஏற்ப). தமிழர்களின் முக்கிய பண்டிகையான உழவர் திருநாள், பொங்கல் பண்டிக்கையும் ஜனவரி மாதம் கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஜனவரி 01 (திங்கட்கிழமை) - புத்தாண்டு தினம்

ஜனவரி 07 (ஞாயிறு)

ஜனவரி 11 (வியாழன்)- மிஷனரி தினம் (மிசோரம்)

ஜனவரி 12 (வெள்ளிக்கிழமை) - சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி (மேற்கு வங்கம்)

ஜனவரி 13 (சனிக்கிழமை) - இரண்டாவது சனிக்கிழமை

ஜனவரி 14 (ஞாயிறு)

ஜனவரி 15 (திங்கட்கிழமை)- பொங்கல்/திருவள்ளுவர் தினம் (தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்)

ஜனவரி 16 (செவ்வாய்) - துசு பூஜை (மேற்கு வங்கம் மற்றும் அசாம்)

ஜனவரி 17 (புதன்கிழமை)- குரு கோவிந்த் சிங் ஜெயந்தி (ஒருசில மாநிலங்கள்)

ஜனவரி 21 (ஞாயிறு)

ஜனவரி 23 (செவ்வாய்) - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி (ஒருசில மாநிலங்கள்)

ஜனவரி 25 (வியாழன்)- மாநில தினம் (ஹிமாச்சல பிரதேசம்)

ஜனவரி 26 (வெள்ளிக்கிழமை) - குடியரசு தினம்

ஜனவரி 27 (சனிக்கிழமை) - நான்காவது சனிக்கிழமை

ஜனவரி 28 (ஞாயிறு)

ஜனவரி 31 (புதன்கிழமை): மீ-டேம்-மீ-ஃபை (அஸ்ஸாம்)

 

மேற்குறிப்பிட்ட நாட்களில் வங்கிகள் இயங்க முடியாத சூழ்நிலையில், தங்களது பணப் பரிவர்த்தனைகளை மொபைல் அல்லது நெட் பேங்கிங் மூலம் பொதுமக்கள் மேற்கொள்ளலாம். நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் மூலம் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை மாற்றலாம்.

 

கூடுதலாக, நீங்கள் பணத்தை மாற்ற UPI ஐப் பயன்படுத்தலாம். பணம் எடுக்க, நீங்கள் ஏ.டி.எம். போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம், வங்கி விடுமுறை நாட்களிலும் உங்கள் வங்கிச் செயல்பாடுகளைச் சீராகத் தொடரலாம். ஏற்கெனவே வங்கி ஊழியர்கள் (4 சனிக்கிழமையும் விடுமுறை) உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் நிலையில், வங்கி ஊழியர்கள் ஜனவரி மாதம் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபடலாம் என தெரிய வருகிறது.