சுதந்திர நாள் சிறப்பு ரயில்கள் வெளியிட்டது ரயில்வே துறை
ஆகஸ்டு 13 மற்றும் 18 தேதிகளில் சிறப்பு ரயில்கள் தென்னகத்தில் இருந்து இயக்கப்படுகிறது
சுதந்திர தினத்தை முன்னிட்டு
வரும் ஆகஸ்ட் 13 மற்றும் 18 தேதிகளில் திருநெல்வேலியில் இருந்தும், 14 மற்றும் 19 தேதிகளில் செங்கல்பட்டில் இருந்தும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ஊர்களில் நின்று செல்லும்.
செங்கல்பட்டில் மாலை 5.55 க்கு புறப்படும் ரயில் (06019) பண்ருட்டிக்கு இரவு 08.05 க்கு வந்து திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 5.50 க்கு செல்லும்.
மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இரவு 10.50க்கு புறப்படும் ரயில் (06020) காலை மறுநாள் காலை 7:40 க்கு பண்ருட்டி வந்து 11.00 மணிக்கு செங்கல்பட்டு செல்லும்.
இந்த ரயிலில் 6 முன்பதிவில்லா பெட்டிகள், 7 ஸ்லீப்பர், 3 மூன்றாம் வகுப்பு ஏசி, 1 இரண்டாம் வகுப்பு ஏசி, 2 பெண்கள்/மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் இருக்கும்.