கிராமப்புற தொழிற் கூட்டமைப்பு முன்னேற்றத்திற்கான திட்டம்

இக்கொள்கையில் வழங்கப்படும் சலுகைகளுடன் மேற்படி திட்ட சலுகைகளை சேர்த்து மொத்த திட்ட செலவினத்தில் 50 சதவீதத்திற்கும் மிகாமல் வழங்கப்படும்

கிராமப்புற தொழிற் கூட்டமைப்பு முன்னேற்றத்திற்கான திட்டம்
rural-enterprise-ecosystem-development

பயிர்கள் / விளைபொருட்கள் சார்ந்த பண்ணை குழுக்களை உருவாக்குதல் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திட்டம் மற்றும் சீரான அணுகுமுறைகளை மேற்கொள்ளுதல் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் தரமான விளைபொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதுடன், விளைபொருட்கள் வீணாவதை குறைத்தல், மதிப்புக் கூட்டுதல், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்தல்.

புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உணவு சிப்பம் கட்டுதல், உணவு பரிசோதனை மற்றும் தரத்தில் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதுடன் உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் இடைவெளியைக் குறைத்தல்.

மூலப்பொருட்கள் அதிக அளவில் கிடைக்கச் செய்தல், பதப்படுத்துவோர்கள் எளிதில் கொள்முதல் செய்வதற்கேற்ற வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் அதிக வருமானம்

ஈட்டக்கூடிய பயிர்கள் சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவித்தல்.

பதப்படுத்துதலை பரவலாக்குதல் மற்றும் தனியார் நிறுவனங்கள், கூட்டுறவு மற்றும் பொது - தனியார் துறை நிறுவனங்களின் பங்கேற்புடன் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், உயரிய தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் கடைப்பிடிப்பதன் மூலம் உணவு பதப்படுத்தும் தொழிலை ஊக்குவித்தல், உணவு பாதுகாப்பு மற்றும் தரத்தினை உறுதி செய்வதற்கான ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வழிமுறைகள் ஏற்படுத்துதல். வேளாண் மற்றும் உணவுப்பொருட்கள் பதப்படுத்தும் தொழில் மூலமாக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல். உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டினை மாற்றுதல் மற்றும் புதிய முதலீடுகளை ஈர்த்தல்.

எதிர்பார்க்கப்படும் நன்மைகள்

சமூக பொருளாதார நன்மைகள்

  • 40 சதவீத மக்கள் வேளாண் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் நிலையில் உணவு பதப்படுத்துதலின் வளர்ச்சி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் நன்மைகளை ஏற்படுத்தும். உணவு பதப்படுத்தும் குழுக்களை ஊக்குவித்தல், உணவுப் பூங்காக்கள் ஏற்படுத்துதல், தொழில் முனைவோர்களை ஊக்குவித்தல், திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்துதல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஆதரித்தல் போன்ற பல்வேறு உத்திகள் இந்த கொள்கையில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், கீழ்க்கண்ட முயற்சிகளில் இவ்வுத்திகள் பெரும்பங்களிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
  • நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட விளைப்பொருட்கள் மதிப்பூட்டும் தொடர் மூலம் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பை குறைப்பதுடன், உணவு இருப்பு மற்றும் ஊட்டச்சத்து தேவையை உறுதி செய்தல்.
  • பண்ணையளவில் வேளாண் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை நிர்ணயிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல்.
  • புதிய உணவு பதப்படுத்தும் மையங்களை உருவாக்குவதன் மூலம் பலதரப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை தயாரிப்பதுடன், விவசாய குழுக்கள் அமைத்து, தொழில் முனை திறனை மேம்படுத்துதல். வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பதன் மூலம் தமிழக மக்களின் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்துதல்.
  • வேளாண்மை விற்பனை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், கோழி மற்றும் மீன் வளர்ப்பு ஆகியவைகளை உள்ளடக்கியது.
  • இக்கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் / மானியங்கள் பெற தகுதியுள்ள உணவுப் பதப்படுத்தும் தொழில்களின் விவரம் இணைப்பு (II) இல் வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு துறை

  • உணவு பதப்படுத்தும் கொள்கையினை செயல்படுத்தும் முகமை நிறுவனமாக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை செயல்படும். மத்திய அரசு மானியங்கள் மற்றும் இக்கொள்கையின் மூலம் பெறக்கூடிய நிதி உதவிகள் ஆகியவற்றை உணவு பதப்படுத்துவோர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பெறும் வகையில் இதர துறைகள், மத்திய அரசு மற்றும் இதர நிறுவனங்களுடன் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஒருங்கிணைந்து செயல்படும்.
  • அனைவரும் எளிதாக அணுகி தகவல்கள் பெறவும், உணவு பதப்படுத்தும் பிரிவு தொடர்பான தகவல்கள் சேகரித்து பரிமாற்றம் செய்ய வல்ல ஆலோசர்களை அங்கீகரிக்கவும், புதிய பொருட்கள் மற்றும் பதப்படுத்தும் தொழில் நுட்பங்களை மேம்படுத்தும் அறிவுசார் மையமாக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை செயல்படும். தேசிய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிலையம், தஞ்சாவூர், மத்திய உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிலையம், மைசூரு மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி ஆகிய நிலையங்களுடன் இம்மையம் இணைந்து செயல்படும்.
  • உணவு பதப்படுத்தும் கொள்கையின்படி பெறப்படும் திட்ட கருத்துருக்களை மதிப்பீடு செய்யவும் மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட செயல்பாட்டினை கண்காணிக்கவும்  வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு உறுதுணையாக செயல்படதிட்ட மேலாண்மை முகமை ஒன்று அமைக்கப்படும்.
  • உணவு பதப்படுத்தும் கொள்கை அமல்படுத்துவதை மேற்பார்வையிடும் பொருட்டு மாநில அளவிலான அதிகாரக் குழு ஒன்று அமைக்கப்படும். இக்குழு திட்ட ஒப்புதலுக்கான அதிகார குழுவாகவும் செயல்படும்.
  • உணவு பதப்படுத்தும் கொள்கையில் தெரிவிக்கப்பட்ட விதிமுறைகளை செயல்படுத்தவும், தேவைக்கேற்ப கொள்கையில் மாற்றம் செய்திட தேவையான முன்மொழிவுகளை வழங்கிடவும், விரிவான வழிமுறைகள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையால் தயார் செய்யப்படும்.

கொள்கை செயல்பாடு

உணவு பதப்படுத்தும் பிரிவு தொடர்பாக இதற்கு முன்னர் இயற்றப்பட்ட கொள்கைக்கு மாற்றாக இவ்வுணவு பதப்படுத்தும் கொள்கை விளங்கும்.

செயற்பொருள் விளக்கங்கள்

தொகுப்பு

மத்திய அரசின் குறு, சிறு மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களின் அமைச்சக விளக்கத்தின்படி, குழு என்பது ஒரே பகுதியில், ஒத்த தயாரிப்புகள்/ சேவைகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் தொகுப்பாகும்.

ஒரு தொகுப்பில் உள்ள நிறுவனங்களின் முக்கியமான பண்புகள்:

  • உற்பத்தி, தரக்கட்டுப்பாடு மற்றும் சோதனை, ஆற்றல் நுகர்வு, மாசு கட்டுப்பாடு ஆகியவற்றில் ஒரே மாதிரியான அல்லது அதை சார்ந்த உகந்த நடைமுறைகளைப் பின்பற்றுதல்.
  • ஒரே மாதிரியான தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான உத்திகளைக் கையாளுதல்.
  • தொகுப்பில் உள்ள உறுப்பினர்களுக்கிடையே தகவல் தொடர்புகளை ஏற்படுத்துதல்.
  • பொதுவான சவால்கள் மற்றும் வாய்ப்புகள்.
  • நுகர்வோர் தனி நபர்கள் மற்றும் குடும்பங்கள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை வாங்கினாலோ அல்லது பெற்றாலோ அவர்கள் நுகர்வோர் ஆவர்.

உணவு பதப்படுத்துதல்

உணவு பதப்படுத்துதல் என்பது வேளாண், பால், கால்நடை, இறைச்சி, கோழி, மீன் ஆகியவற்றின் மூலப்பொருட்கள் (மனித ஆற்றல், இயந்திரங்கள் அல்லது பணம் மூலம்) இயற்பியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு, விலை மதிப்புமிக்க பொருளாக மனிதர்கள் மற்றும் கால்நடைகள் நுகரும் வகையில் பதப்படுத்துதலாகும்.

மேலும், உணவுப் பொருட்களின் சேமிப்பு கால நீட்டிப்பு மற்றும் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு பதப்படுத்துதல், உணவு சேர்க்கைகள் மற்றும் உலர்த்துதல் முறையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதும் ஆகும்.

உணவு வர்த்தகர்கள் / தொழில் முனைவோர்

உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006-ன்படி, உணவு வர்த்தக தொழில் முனைவோர் என்பவர் சுய தொழிலாகவோ அல்லது பிற தொழிலாகவோ உணவு வர்த்தகத்தை மேற்கொள்பவர். மேலும், மேற்குறிப்பிட்ட சட்டத்திட்டங்களை பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் பொறுப்புக்குரியவராவர்.

உணவு பாதுகாப்பு

உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006-ல் வரையறுக்கப்பட்டபடி, உணவு பாதுகாப்பு என்பது உணவுப்பொருள்கள் மனிதர்கள் பயன்படுத்துதலுக்கு ஏற்றவாறு உள்ளதை உறுதி செய்வதாகும்.

உணவுப்பூங்கா

உணவுப்பூங்கா என்பது பதப்படுத்துவதற்கு உகந்த வேளாண், தோட்டக்கலை, கால்நடை, இறைச்சி, கோழி, பால் மற்றும் மீன் பொருட்களை உற்பத்தி செய்து நிர்ணயம் செய்யப்பட்ட செயல் விதிமுறைகளின்படி உணவு பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்படும் இடமாகும்.

சிறுதொழில்கள்

சிறு தொழில்கள் என்பது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டுச் சட்டம் 2006-ன் படி அவ்வப்போது வரையறுக்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளடக்கியதாகும்.

உணவு பதப்படுத்தும் கொள்கைக்கான உத்திகள்

கூட்டுப்பண்ணையத் திட்டத்தினை ஊக்குவித்தல்

தமிழக அரசு, கூட்டுப்பண்ணையத் திட்டம் மற்றும் அதைப் போன்ற இதர திட்டங்கள் மூலம் உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான மூலப் பொருட்களின் உற்பத்தியினை அதிகரித்து விவசாயிகள் மற்றும் தொழில்துறை பயனடையவும், மேற்படி பங்குதாரர்களின் வளர்ச்சியை சரிசமமாக மேம்படுத்தவும், கூட்டுப் பண்ணையம் மற்றும் சாகுபடியாளர்களை குறிப்பாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் / கூட்டுறவு சங்கங்கள்/ உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதை ஊக்குவிக்கும்.

ஒப்பந்தப்பண்ணையச் சட்டம்

தமிழக அரசு, விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோர்கள் பரஸ்பரம் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் மற்றும் கால்நடைகளுக்கான ஒப்பந்தப்பண்ணையம் மற்றும் சேவைகள் (மேம்பாடு மற்றும் வசதி சட்டம் 2018-ஐ விரைவில் செயல்படுத்த உள்ளது.

காய்கறி மற்றும் பழங்களுக்கான விநியோக தொடர் சங்கிலித் திட்டம் -

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு பிரத்யேகமாக முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் உருவாக்கப்பட்டு, அச்சு - ஆரம் முறையில் பண்ணை வாயில், விற்பனை முனையங்கள் / உணவு பதப்படுத்தும் நிலையங்கள் ஆகியவற்றை இணைப்பதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு பதப்படுத்துவோர்களுக்கு தொய்வற்ற, தொடர்ச்சியான சந்தைக்கு உரிய ஆதரவு ஏற்படும்.

வேளாண் விளைபொருட்களுக்கேற்ற தொகுப்புகளை உருவாக்குதல்

விவசாயிகள் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஏற்பட்டுள்ள மேம்பாட்டினை பயன்படுத்தி கொள்ளவும், தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைக்க செய்யவும், வேளாண் விளைப்பொருட்களுக்கு ஏற்ற தொகுப்புகளை உருவாக்கி அந்தந்த பகுதிகளின் உணவு உற்பத்தி திறனை உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் பயன்படுத்திட தமிழக அரசு உதவி புரியும். இதன் மூலம் மனிதவளம், முலதனம், வேலையாட்கள், சந்தை உட்கட்டமைப்பு வசதிகள், சமூகநல மேம்பாடு மூலப் பொருள் இருப்பு போன்ற முக்கிய பிரச்சனைகள் எதிர்கொள்ளப்படும். அறுவடைக்குப்பின் வேளாண் விளைப்பொருட்களில் ஏற்படும் இழப்பினை குறைக்கவும், முன் மற்றும் பின் ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொகுப்பு மேம்பாட்டு திட்டத்தில் பங்கேற்பதை ஊக்குவிக்கும்.

உட்கட்டமைப்பு வசதிகள்

எளிதில் வீணாகும் காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன், கோழி இறைச்சி ஆகியவற்றை கையாள தேவையான தற்போதைய உட்கட்டமைப்பு வசதிகள் உணவு பதப்படுத்தும் தொழில் துறையில் துரித வளர்ச்சி ஏற்படும் வகையில் மேம்படுத்தப்படும். இது தவிர, குளிர்சாதன கிடங்கு, குளிர்சாதன வாகனம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் மூலம் ஏற்படுத்திட நிதி உதவி வழங்கப்படும்.

மானியங்கள்

ஏற்கனவே மத்திய அரசால் வழங்கப்படும் மானியங்கள் மற்றும் சலுகைகளுடன், இக்கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் மானியங்கள் தமிழக அரசால் உணவு பதப்படுத்தப்படும் தொழிற்சாலைகளுக்கு கூடுதலாக வழங்கப்படும். மேலும், தமிழ்நாடு தொழிற் கொள்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஊக்கத் தொகை மற்றும் சலுகைகள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கும், உணவு சிப்பம் செய்யும் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்.

இதர மானியத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுதல்

இக்கொள்கையில் தெரிவிக்கப்படும் மானியங்களுடன் மத்திய அரசு திட்டங்களான சம்பதா, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் திட்டங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தேசிய தோட்டக்கலை வாரியம், தேசிய தோட்டக்கலை இயக்கம் ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் மானியங்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் ஒருங்கிணைக்கப்பட்டு புதிய சிறு குறு தொழில் முனைவோர்கள் மற்றும் இதர தொழில் முனைவோர்களுக்கும் வழங்க வழிவகை செய்யப்படும். இக்கொள்கையில் வழங்கப்படும் சலுகைகளுடன் மேற்படி திட்ட சலுகைகளை சேர்த்து மொத்த திட்ட செலவினத்தில் 50 சதவீதத்திற்கும் மிகாமல் வழங்கப்படும். 50 சதவீதத்திற்கும் மேல் வழங்கப்படும் மானியத்திற்கு இந்நிபந்தனை பொருந்தாது.

எளிதாக வணிகம் மேற்கொள்ள அரசின் நடவடிக்கைகள்

புதியதாக தொடங்கப்படும் மற்றும் நடைமுறையில் செயல்பட்டு கொண்டு இருக்கும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் எளிதாக வணிகம் மேற்கொள்ளும் பொருட்டு தமிழக அரசு கீழ்க்குறிப்பிட்டுள்ள முயற்சிகளை அறிமுகப்படுத்த உள்ளது.

ஒற்றைச்சாளர வசதி

  • சிறு தொழில் நிறுவனங்களுக்கு தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குநரகம் மூலமாகவும், பெரிய தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகம் மூலமாகவும் ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும்.
  • மேற் கண்ட இவ்விரு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து,
    உணவுபதப்படுத்தும் தொழிற்சாலைக்கான முன்மொழிவுகள் ஒப்புதல் பெற்றிட ஒருங்கிணைப்பு சேவை மையம் ஒன்று வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் அமைக்கப்படும்.

தொழிலாளர் சலுகைகள் விரிவாக்கம்

தமிழ்நாடு தொழிற் கொள்கை 2014-ல் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் தர நிலைகள் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்.

உணவுப்பூங்காக்கள் அமைத்தல்

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உணவுப் பூங்காக்கள் அமைக்க தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த உணவுப் பூங்காக்கள், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, மீன், கோழி, பால் போன்ற வேளாண் உற்பத்தி பொருட்களை பதப்படுத்தும் மையமாக திகழும். இத்தகைய உணவுப் பூங்காக்களுக்கான, உட்சாலைகள், வடிகால் வசதி, தண்ணீர் வசதி, மின்வசதி, திடக்கழிவு மேலாண்மை நிலையம்,

இதர மானியத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுதல்

இக்கொள்கையில் தெரிவிக்கப்படும் மானியங்களுடன் மத்திய அரசு திட்டங்களான சம்பதா, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் திட்டங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தேசிய தோட்டக்கலை வாரியம், தேசிய தோட்டக்கலை இயக்கம் ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் மானியங்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் ஒருங்கிணைக்கப்பட்டு புதிய சிறு குறு தொழில் முனைவோர்கள் மற்றும் இதர தொழில் முனைவோர்களுக்கும் வழங்க வழிவகை செய்யப்படும். இக்கொள்கையில் வழங்கப்படும் சலுகைகளுடன் மேற்படி திட்ட சலுகைகளை சேர்த்து மொத்த திட்ட செலவினத்தில் 50 சதவீதத்திற்கும் மிகாமல் வழங்கப்படும். 50 சதவீதத்திற்கும் மேல் வழங்கப்படும் மானியத்திற்கு இந்நிபந்தனை பொருந்தாது.

எளிதாக வணிகம் மேற்கொள்ள அரசின் நடவடிக்கைகள்

புதியதாக தொடங்கப்படும் மற்றும் நடைமுறையில் செயல்பட்டு கொண்டு இருக்கும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் எளிதாக வணிகம் மேற்கொள்ளும் பொருட்டு தமிழக அரசு கீழ்க்குறிப்பிட்டுள்ள முயற்சிகளை அறிமுகப்படுத்த உள்ளது.

ஒற்றைச்சாளர வசதி

சிறு தொழில் நிறுவனங்களுக்கு தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குநரகம் மூலமாகவும், பெரிய தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகம் மூலமாகவும் ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும்.

மேற்கண்ட இவ்விரு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து,
உணவுபதப்படுத்தும் தொழிற்சாலைக்கான முன்மொழிவுகள் ஒப்புதல் பெற்றிட ஒருங்கிணைப்பு சேவை மையம் ஒன்று வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் அமைக்கப்படும்.

தொழிலாளர் சலுகைகள் விரிவாக்கம்

தமிழ்நாடு தொழிற் கொள்கை 2014-ல் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் தர நிலைகள் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்.

உணவுப்பூங்காக்கள் அமைத்தல்

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உணவுப் பூங்காக்கள் அமைக்க தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த உணவுப் பூங்காக்கள், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, மீன், கோழி, பால் போன்ற வேளாண் உற்பத்தி பொருட்களை பதப்படுத்தும் மையமாக திகழும். இத்தகைய உணவுப் பூங்காக்களுக்கான, உட்சாலைகள், வடிகால் வசதி, தண்ணீர் வசதி, மின்வசதி, திடக்கழிவு மேலாண்மை நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தொலைதொடர்பு போன்ற அடிப்படை வசதிகள் மாநில அரசால் ஏற்படுத்தப்படும். தேவைக்கேற்ப பொது கட்டமைப்பு வசதிகளான உணவுப்பொருள் சோதனை ஆய்வகம், கழிவுப் பொருட்கள் உள்ளிட்ட பரிசோதனை தரக்கட்டுப்பாடு ஆய்வகம், சந்தைக் களம், வர்த்தக சேவை மையங்கள், போக்குவரத்து வசதிகள், சிப்பம் கட்டும் வசதிகள் (Packing), குளிர்சாதன சேமிப்புக் கிடங்கு, ஏற்றுமதி இறக்குமதி மையங்கள் போன்ற வசதிகள் உணவுப்பூங்காக்களில் ஏற்படுத்தப்படும் தொழில் முனைவோர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தனியார் உணவு பதப்படுத்துவோர்கள், சிப்பம் கட்டும் தொழிற்சாலைகள் உணவு பூங்காக்களில் முதலீடு செய்ய ஏதுவாக வெவ்வேறு அளவுகளில் மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் அமைக்கப்பட்டு சலுகை விலையில் அளிக்கப்படும். உணவுப்பதப்படுத்தும் பூங்காக்கள் கீழ்க்காணும் மூன்று வகைகளில் ஏற்படுத்தப்படும்

சிறு உணவுப்பூங்காக்கள்

சிறு உணவுப் பூங்காக்கள் என்பவை, 10 ஏக்கர் வரையிலான பரப்பளவில் ஏற்படுத்தப்படும் உணவு பூங்காக்கள் ஆகும். இவற்றுக்கான நிலம் மற்றும் பொது கட்டமைப்பு வசதிகள் அரசால் உருவாக்கப்படும். முதலீட்டின் அளவைப்பொறுத்து இச்சிறு உணவு பூங்காக்கள், தமிழ்நாடு தொழிற் கொள்கை 2014-ல் அளிக்கப்படும் முதலீட்டு மானியம் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் கீழ் வழங்கப்படும் மானியங்கள் போன்றவை பெற தகுதியானவை.

பெரு உணவுப்பூங்காக்கள்

10 முதல் 50 ஏக்கர் பரப்பளவில் சுமார் 20 உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் கொண்டவை பெரு உணவுப் பூங்கா ஆகும். தொழில்மனைகள் அரசால் மேம்படுத்தப்படும். ஆனால் பொது வசதிகள் தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ . அல்ல து த மி ழ க அ ர சு tieNilgiris மூலமாகவோ உருவாக்கப்படும். முதலீட்டின் அளவைப் பொறுத்து இப்பெரு உணவு பூங்காக்கள், தமிழ்நாடு தொழிற் கொள்கை 2014-ல் அளிக்கப்படும் முதலீட்டு மானியம் மற்றும் மத்திய அரசின் திட்டங்களின் கீழ் TMC 5 வழங்கப்படும் மானியங்கள் போன்றவைகளை பெற தகுதியானவை.

மிகப் பெரிய உணவுப் பூங்காக்கள் 50 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் தமிழ்நாட்டில் குறைந்தது 30 உணவு பதப்படுத்தும் உத்தேசிக்கப்பட்டுள்ள தொழிற் சாலைகளைக் கொண்ட  தற்போது செயல்பாட்டில் உள்ள தமிழ்நாடு தொழிற் கொள்கையின்படி முதலீட்டு மானியம் வழங்கப்படும்.

வட்டி மானியம் வழங்குதல்

உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், குளிர்பதன தொடர் உட்கட்டமைப்பு, முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள், முதன்மை சேகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் நிலையான முதலீட்டுக் கடனுக்கு ஆண்டுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மத்திய அரசு அல்லது மாநில அரசால் வழங்கப்படும் வட்டி மானியத்தில் பொருத்தமானதை தேர்ந்தெடுத்து பயன்பெறலாம்.

மகளிர் அல்லது ஆதிதிராவிடர் / பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் வட்டி மானியம்

புதிதாக தொழில் துவங்கும் மகளிர் அல்லது ஆதிதிராவிடர் / பழங்குடியின் தொழில் முனைவோர்களுக்கு நிலையான முதலீட்டு மூலதனத்துக்காக பெறப்பட்ட கடனுக்கு வட்டி மானியத்துடன் ஆண்டுக்கு 2% வட்டி மானியம் கூடுதலாக வழங்கப்படும்.

வரி சலுகைகள் - மாநில சரக்கு மற்றும் சேவை வரி

நில மதிப்பு அல்லாமல் ரூ. 10 கோடிக்கும் மேல் முதலீடு செய்யும் புதிய தொழிற்சாலைகளுக்கு காய்கறி, பழங்கள், மருத்துவப்பயிர்கள், சிறுதானியங்கள், இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவைகளை பதப்படுத்த மாநில சரக்கு மற்றும் சேவை வரி, தொழில் துவங்கிய நாளிலிருந்து மூன்று வருடங்களுக்கு ஈடு செய்யப்படும். மேலும், அதிக மான முதலீடு செய்யும் பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு , தமிழ்நாடு தொழிற்கொள்கை 2014-இன்படி பெரிய தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்
வரி சலுகைகள் பொருந்தும்.

முத்திரை கட்டணம் விலக்கு

தமிழ்நாடு தொழிற்கொள்கை 2014-ல் குறிப்பிட்டுள்ள முத்திரை கட்டண விலக்கு, பதிவு செய்யப்பட்ட உணவுப்பூங்காக்கள் மற்றும் இதர தொழிற் பூங்காக்களில் அமைக்கப்படும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும் 16.9 சந்தைக் கட்டண விலக்கு

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடமிருந்து காய்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாக கொள்முதல் செய்து பதப்படுத்தலுக்காக உணவுப் பூங்காக்களுக்கு கொண்டு வரப்படும் பொருட்களுக்கு சந்தைக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

சந்தைப்படுத்துவதற்கான உதவி

  • உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் பதப்படுத்தும் பொருட்களை சிப்பம் கட்டுதல், வணிகச் சின்னம் உருவாக்குவதில் தொழில்நுட்ப உதவி ஆகியவைகளை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையினால் வழங்கப்படும்.
  • தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் கீழ்க்குறிப்பிட்டுள்ள மானியங்கள் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும். ஒப்பந்தத்தில் பங்கேற்கும்போது பிணைய வைப்புத் தொகையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • கண்காட்சியில் பங்கேற்பதற்காக கண்காட்சி அறைக்கான வாடகையில் 50% மானியம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் வர்த்தக சந்தைகள் மற்றும் கண்காட்சிகளில் பங்கேற்கும் செலவில் 50% திரும்ப வழங்கப்படும்.

தரச்சான்றிதழ்/காப்புரிமை பதிவு வசதி

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் நெறிமுறைகளின்படி அல்லது நடைமுறையில் உள்ள பிற பொருந்தக்கூடிய விதிமுறைகளின்படி உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு தரச் சான்றிதழ் பெறுவதில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை உதவும்.

போக்குவரத்து உதவி

உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான குளிரூட்டும் வாகனங்களை வாங்குவதற்கு, உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கான மத்திய அமைச்சகம், தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேலாண்மை இயக்கம் போன்ற திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மானியங்கள் பெறுவதில் தமிழக அரசு உதவி புரியும். 16.13 ஏற்றுமதி சலுகைகள்

தொழில் மற்றும் வர்த்தகத்துறை அல்லது நடைமுறையில் உள்ள பிற பொருந்தக்கூடிய விதிமுறைகளின்படி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் ஏற்றுமதி ஊக்கத் தொகை, உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்.

தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

மாநில திறன் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதிய தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் உணவு பதப்படுத்தும் பூங்காக்களில் அமைக்கப்படும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்படும்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பரிசோதனை ஆய்வகங்கள் அமைத்தல்

உணவுப் பூங்காக்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள், தர பரிசோதனை ஆய்வகங்களை ஒரு அடிப்படை வசதியாக அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் இதர மாநில பல்கலைக்கழகங்களில் கண்டறியப்படும் நவீன தொழில்நுட்பங்களுக்கு இவ்வாய்வகங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.